பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 184

தன்மை தான்ாகவே வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வாய்ப்பும், சாதனங்களும், வசதிகளும் இங்கே கிடைக்கின்றன.

எனவே, ஒரு சாதகர் குருவின் பக்தியிலும், ஆண்ட வனுடைய ஆன்மீகச் சிந்தனைகளிலும் முன்னேறும் தகுதியை,

தரத்தை, வளர்ச்சியை அவரவராகவே உணருவார்.

சாதகர்களுக்குரிய வழிகாட்டி அன்னை. அவர் தனது சக்தியால் சாதகர்களை அருள்நெறியில் முன்னேற வழிகாட்டியாக இருக்கின்றார். ஒவ்வொரு சாதகருக்கும் அன்பாலும், அறிவாலும், சக்தியாலும், சைதன்யத்தாலும் அன்னை உறுதுணையாக உள்ளார்.

ஆசிரமத்துக்கு என்று ஓர் இலட்சியம் உண்டல்லவா? அது என்ன? உலகத்தை யோகம் வெறுக்கவோ, புறக் கணிக்கவோ, காடேகவோ, கமண்டலமேந்தவோ அரவிந்தர் கூறவில்லை.

ஆன்மாவின் முக்தி வேண்டியதே; ஆனால், மற்ற உயிரினங்கள் எல்லாம், அறியாமையிலிருந்தும், நோய் களிலிருந்தும், இருளிலேயிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்பதே ஆன்மாவின் இலட்சியமாகும். இது ஆசிரமத்தின் தலையாய இலட்சிய வேட்கை.

ஆசிரமத்திலுள்ள ஒவ்வொரு சாதகரிடமும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. ஆண்டவனுக்காகப் பணிபுரிவதென்றால், உடலினால் வழிபாடுகள் செய்வது என்று பொருள். To work for the Divine is to Pray with the Body, eloquo;#60 sissist Los செய்யப்படுகின்றது என்பதைவிட, அந்தப் பணி எப்படிச் செய்யபடுகின்றது என்பதையே கவனிக்கிறார்கள்.

ஏன் தெரியுமா? பாவனையால்தான்் பணி உபாசனை ஆகிறது. அறிவை மென்மேலும் வளர்த்து, அதை இச்சையிட