பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 ஆற்றங்கரையினிலே

காளமேகத்தின் கண் சுழன்றது; கால் தளர்ந்தது. உடல் சோர்ந்தது. ஒதுக்கமான ஒர் இடத்தில் படுத்து உறங்கி விட்டார். பெருமாளை வெளியே எழப் பண்ணும் வேளை வந்தது. முரசு அதிர்ந்தது. சீர்பாதம் தாங்கிச் சேவை செய்வதற்குரிய பணியாளர்கள் தண்டயத்தின் அண்டை யில் வந்து சேர்ந்தனர். கருடனது திருவடியின் அருகே அவ் வாகனத்தில் அமர்ந்தார் கோயிற் குருக்கள்.

தண்டயத்தைத் துக்கித் தோளில் வைத்தபோது

சீர்பாதப் பணியாளரில் ஒருவர் வரவில்லை என்று குருத்தள் குறை கூறினர். அப்போது தூண் மறைவிலே உறங்கிக் கொண்டிருந்த காளமேகத்தைத் தட்டி எழுப்பித் தண்ட யத்தை அவர் தோளிலே மாட்டி மகிழ்ந்தனர் மெய்யடி யார்கள். அவரும் தம் தலைவிதியை நொந்துகொண்டு தண்டயம் தாங்கினார். -

திருவீதியிலே கோலாகலமாகச் சென்றார் பெருமாள். வீடுதோறும் நின்று சேவை சாதித்தார். காளமேகத்தின் தோள் கடுத்தது; கால் வலித்தது: கை சலித்தது. பொறி யில் அகப்பட்ட எலிபோல் துடித்தார்.

ஊரைச் சுற்றி வந்து விமானம் இறங்கிற்று. காள மேகத்தின் சீற்றம் தலைக்கு ஏறிற்று. பெருமாள் முன்னே நின்று வசை பாடலுற்றார்.

“ பாளைமணம் கமழ்கின்ற கயத்தாற்றுப்

பெருமாளே பழிகாரா கேள்

நாளைஇனி யார்சுமப்பார் எந்நாளும் உன்கோயில் நாசம்தானே”

என்று வசைபாடி அவ்வூரை விட்டகன்றார். *

இவ்வாறு காளமேகத்தின் வசைப்பாட்டைப் பெற்ற கயத்தாறு என்னும் ஊர் தென்பாண்டி நாட்டில்

இது ஆண்டான் கவியின் பாட்டு என்பாரும் உளர்.