பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஜீ குன்றக்குடி அடிகளர்

நடைமுறை வாழ்க்கை விஞ்ஞானமாகவும் உருப்பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதத்திற்கு வழி நூல்கள் பல தோன்றினாலும் அவ்வழி நூல்கள் முதல் நூலில் நுண்பொருளளவாகச் சொல்லப் பெற்ற செய்திகளை எளிமைப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டன. மாதவச் சிவஞான முனிவர் உரை விளக்கம் எழுதி, சிவஞான போதத்தை விளக்கமுறப் பயிலத் துணை செய்தார். எனினும், சித்தாந்தச் சைவத்தைத் தனியொரு நெறியாகப் பேணி வளர்க்கவும் சித்தாந்தச் சைவ நெறியை வாழ்க்கை நெறியாக உருக்கொடுக்கவும் நாம் தவறியது ஒரு குறையேயாம். இன்றாவது, கடவுள் மறுப்பு இயக்கங்கள் எதனால் தோன்றின? கடவுள் மறுப்பு இயக்கங்கள் தோன்றுவதற்குரிய அடிப்படைக் காரணங்களை மாற்ற முடியுமா? அப்படி யானால் ஏற்றுக்கொள்ளத்தக்கன எவை? விடத்தக்கன எவை? என்று ஆய்வு செய்வது சித்தாந்தச் செந்நெறிக்கு அரண் செய்ய உதவியாக இருக்கும். பரபக்கத்தில் ஏற்படும் தெளிவுதான்் சுபக்கத்தில் துணிவைத் தருகிறது எந்பது நமது மரபு வழிக் கருத்து. அதனால், நாம் "சைவசித்தாந்தமும் மார்க்சியமும்" என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு தத்துவங்களையும் அடக்கத்துடன் கற்கும் மாணவனாக இருந்து வருகின்றோம். இந்த ஆய்வினைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடனேயே மார்க்சியத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டுள்ள சோவியத்துக்கும் சீன நாட்டுக்கும் சென்று வந்தோம்.

மார்க்சியமும் சைவ சித்தாந்தமும் இயல்பாகவே ஒன்றாயிருத்தல் இயலாது. சைவ சித்தாந்தம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் முழுமை நிலையடைந்தது. உலகாயதம் வளர்ந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமை யடைந்தது. கால வேறுபாடு - இட வேறுபாடு இவற்றுக்