பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 43

"திருக்கோயில் இல்லாத திருவி லுரரும்

திருவெண்ணிறணியாத திருவி லுரரும் பருக்கோடிப் பத்திமையாற் படாத வூரும்

பாங்கினொடு பலதளிகள் இல்லா வூரும் விருப்போடு வெண் சங்கம் ஊதா வூரும்

விதான்மும் வெண்கொடியும் இல்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே."

என்ற அப்பரடிகளின் திருப்பாடலும்,

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'

என்ற உலக நீதிப் பாடல் அடியும் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குவன.

தமிழர்கள் திருவுருவ வழிபாட்டில் அசைவிலா நம்பிக்கையுடையவர்களாய் விளங்கி வருகின்றனர். தமிழர்கள் தீவிரமான பக்தி நெறி நிற்பவர்கள், அவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு பொருளிடத்தில் கடவுளாற்றலை உருவகப்படுத்திக்கொண்டு பத்திமை செய்பவர்கள்.

திருக்கோயில்கள் பரம்பொருளை உணர்வதற்குக் கருவியாகவும் பக்தி நெறியைப் பரப்புவதற்குச் சாதன மாகவும் விளங்கி வருகின்றன. ஆதலால், நமது இந்திய நாட்டில் இந்துமதக்கோயில்களின் எண்ணிக்கை மிகுதி. இத்திருக்கோயில்களைக் கட்டும் பணி கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கப் பெற்று விட்டது என்பதை வரலாறும் இலக்கியமும் எடுத்துக் காட்டுகின்றன. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்தி லிருந்த தென்மதுரை என்ற நகரத்தில் நகரமனைய திருக் கோயில் இருந்ததைப் புறநானூறு பேசுகிறது. குமரியாறு கடல்