பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியேன் விண்ணப்பம் ஊரெல்லாம் திருட்டுப் பயம். திருட்டை கடத்து கிறவன் சாமான்யமான திருடன் அல்ல. பக்காத் திருடன்: பகல் கொள்ளேக்காரன். அவன் எந்தச் சமயத்தில் வருவான்.என்று தெரியாது. ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிருர்கள். எத்தனையோ நாளாகப் பாடுபட்டுத் தேடி நெடுங்காலம் இன்பம் அதுபவிக்கலாம் என்று ஊரில் வாழும் மக்கள் பொருளேச் சேமித்து வைத்திருக்கிருர்கள். உயர்ந்த சம்பா நெல்லைக் குதிரில் போட்டு வைத்திருக்கிருர்கள். புதிய பட்டும் துகிலும் வாங்கிப் பெட்டியில் வைத்திருக்கிரு.ர்கள். மங்கையர்கள் நகை குலுங்கும் மரமாக நிற்கிருர்கள். அந்தப் படுடாவி வந்துவிட்டால் இந்த வாழ்வு அத்தனே யும் நாசமாகிவிடும். . . . - கள்ளனுடைய பயத்தைப் போக்க வழி தெரியாமல் t திண்டாடுகிறர்கள், ஊரில் வாழும் மக்கள். அவன் அந்த ஊருக்கு வந்தான், இந்த ஊருக்கு வந்தான் என்ற செய்தி காதில் விழும்போதெல்ல்ாம் அவர்களுடைய குலே நடுங்கு கிறது. ஏதோ ஒர் ஊரில் ஒரு பணக்காரனுக்கு அவன் ஒல் எழுதினனம். 'ங்ான் இன்ன வேளையில் வருவேன். உங்கள் பெட்டி பேழையில் உள்ளவைகளையெல்லாம் நீங்களே திறந்து எடுத்துச் சித்தமாக வ்ைத்திருங்கள். நான் வந்து வாங்கிக்கொள்கிறேன். ஏதாவது சூழ்ச்சி செய்தீர்களோ தொலைந்துவிட்டீர்கள் ஜாக்கிரதை' என்று அவன் எழுதியிருந்தானம். என்ன துணிச்சல்: இவனே அடக்குவார் இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/25&oldid=744387" இலிருந்து மீள்விக்கப்பட்டது