பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 ஆழ்வார்கள் காலநிலை இதன் பொருள். இவ்வாக்கியக்கருத்தையே ஆழ்வார் அருளியதொடர் உட்கொண்டிருத்தல் ஒப்பிட்டறியத் தகும். வணங்கு நீண்முடிமாலை' என்பதற்கு-' தன்னை வணங்குகின்ற (மன்னரது) முடிகளாகிய மாலையை உடைய' என்பது பொருள், தண்டனிட்டு வணங்கு வோரின் முடியாகிய மாலையைத் தாங்கிநிற்போனது உறுப்பு, அவனது அடியே என்பது தானே பெறப் படுதலின், 'முடியடிமாலைவயிரமேகன்' என்னாது, பாட் டமைதி நோக்கிச் சொற்சுருங்க முடிமாலை வயிரமேகன்' என்று ஆழ்வார் கூறலாயினர் என்க. இவ்வாறன்றி ‘வணங்குவோரின் முடியாகிய மாலையைத் தன் தோளி லேனும் தலையிலேனும் அணிந்தவன்' என்று அத்தொடர்க்குக் கருத்துக்கூறல் முற்றும் பொருந் தாமை காணலாம். ஆகவே, நந்திவர்மனது புகழ்ச்சியாகத் தங் காலத்து வழங்கிய வடமொழித்தொடரின் கருத் தமையவே, ஆழ்வார் தம் பாடற்றொடரை அமைத்தனரி என்பதிற் சிறிதும் ஐயமில்லை. மூன்றாவது--வயிரமேகவாய்க்கால் என்ற ஓடை யொன்று நந்திவன்மமங்கலம் என்ற ஊரில் உள்ள தென்பதும், வயிரமேகபுரம் என்ற ஊரில் நந்தீசுவரம் என்ற ஆலயமுள்ளமையும் சாஸனத்தால் தெரியவரு கின்றன. இவ்வூர்களும் வாய்க்காலும் அரசனொருவன் பெயர்பெற்றன என்றும், அதனால் நந்திவன்மனும் வயிர மேகனும் ஒருவனே யென்றும் கருதற்கு இடமுண்மை தெரியலாகும் இம்மூன்று ஏதுக்களாலும் வயிரமேகன் 1. An. Rep; Nos. 458 and 466 of 1908. 2. Ibid. Nos. 253-258 of 1913,