பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 ஆழ்வார்கள் காலநிலை அதனால், பல்லவ பாண்டிய வரசர்க்குள் தீராப் பெரும் பகை பலதலை முறையளவாக' உண்டாகியது. ஆகவே, படையெடுத்து வந்த அவ்வட வேந்தனை எதிர்த் தோட்டப் பல்லவனுடன் பாண்டியன் சேர்ந்து கொண்டான் என்பதினும், பேராற்றல் பெற்றிருந்த பல்லவனை யொடிக்கி அவன் கவர்ந்துள்ள சோணாட்டை உரியவர் பொருட்டுப் பெற, அப்பாண்டியன் அப்பல்ல வன் குலப்பகைவனைத் துணைக் கொண்டான் என்பதே பற்றதாகும். இக்கருத்தை ஆதரிக்க மற்றொரு பிரமாணமுமுண்டு. விக்கிரமாதித்தன் தந்தை புலகேசி பல்லவனான மகேந்திரவர்மனை வென்ற செய்தி கூறும் ஐஹோல் சாஸனத்தில் - “பல்லவ சேனையாகிய பனிக்கு எரிகதிரோனாய்,சோழ பாண்டிய கேரளர் மூவர்க்கும் நன்மை மிகும்படி செய்தான் என்று அப்புலகேசி புகழப் படுகின்றான். இதனால், தமிழரசர்க்கு இடுக்கண்விளைத்து வந்த பல்லவாதிக்கத்தைத் தொலைத்துப் பழைய நிலையில் அவர்களை நிலைநாட்டுவதும், அவனது தென்னாட்டுப் படையெடுப்பின் நோக்க மாயிருந்தது என்பது தெரியலாம். இதனால், தமிழரசர் பல்லவர்க்கு 1. (இம்மாறவர்மன் கொட்பேரன் பராந்தகன்நெடுஞ்சடையன் பல்லவ சேரர்களுடன் பலபோர்கள் புரியநேர்ந்ததும் இப்பழம்பகைமை பற்றியேயாம். பல்ல வனுங் கேரளன, மாங்கவற்குப் பாங்காகி அணுக வந்து விட்டிருப்ப...இருவரையு மிருபாலு மிடரெய்தப் படை விடுத்து என்று நெடுஞ்சடையனைப் பற்றிச் சீவரமங்கல சாஸனங் கூறுதல் காண்க. (Indian Antiquary, Vol, XXII-'Madras *Museum Plates") 2. Bp. Ind. VI, p.1.