பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

188 ஆழ்வார்கள் காலநிலை “தெருவிற்றிரி சிறுநோன்பியர் செஞ்சொற்றொடு கஞ்சி மருவிப்பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர் (க்ஷ, 7, 9, 2.) வெள்ளியார் பிண்டியார் போதியா ரென்றிவ ரோதுகின்ற -கள்ள நூல் தன்னையுங் கருமமன் றென்றுயக் கருதினாயேல்" (ஷ, 9, 7, 9.) “வந்திக்கு மற்றவர்க்கு மாசுடம்பில் வல்லமணர் தமக்கு மல்லேன்" ( க்ஷ, 7, 4, 5.) என்று இவ்வாழ்வாரும், “புலையற மாகிநின்ற புத்தொடு சமணமெல்லாங் கலையறக் கற்றமாந்தர் காண்பரோ கேட்பரோதான்” வெறுப்பொடு சமண மிண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பாற் பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகில்" (திருமாலை. 8, 7.) என்று திருமங்கைமன்னனுக்குச் சமகாலத்தவரான தொண்டரடிப் பொடிகளும் அருளிச்செய்தல் காண்க. பழங்காலத்தில் சைனர்கள் மிகுதியும் தங்கி வாழ்ந்த மலைகள் எட்டாகும். அவற்றை" பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம் என்றெட்டு வெற்பு மெடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றொட்டு மோபிறவித் தீங்கு என்னும் பழைய வெண்பாவான்1 அறிக. “வண்பெருஞ் சிறப்பின் மாதவம் புரிந்தாங், கெண்பெருங் குன்றத் 1. திருவாலவாயுடையார் புராணம், குறிப்புரை, பக். 288 (முதற்பதிப்பு.)