பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 ஆழ்வார்கள் காலநிலை போக்குக்கு ஏற்பக் கருத்து உரைப்பர் முன்னோர்" இவற்றால் • இச்செங்கணான் வரலாறுகள் ஆழ்வார்கள் காலத்தே பிரசித்தமாக வழங்கி வந்ததென்பது தெரிய லாகும். இனி, அரசர்க்கரசனும் பரமபாகவதனுமான தொண்டை வேந்தனொருவனுடன் திருமால் ஏழு நாழிகையளவும் எழுந்தருளியிருந்து, திருமந்திரப் பொருளை அவற்கு உபதேசித்தருளினர் என்பதனை-- “ துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற் குளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப வளங்கொள் மந்திர மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந் துலக மளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொழிற்றிரு வரங்கத் தம்மானே " (பெ. தி. 5, 8, 9,) என்ற பாசுரத்தால் இவ்வாழ்வார் கூறுகின்றார். இப் பாட்டுட் கண்ட தொண்டை மன்னவன், பல்லவ வேந்தனாவன். இவன, பரமபாகவதனான சிம்ம விஷ்ணு வேனும் (உத்: 580), தங்காலத்து விளங்கிய நந்தி வர்மனேனும் ஆதல் வேண்டும். இவ்வேந்தனேயன்றி 3, ஸ்ரீ பெரியவச்சான் பிள்ளை முதலியோர் வியாக்கி யானங்காண்க. 4. பல்லவர்கள் --தொண்டையர்கோன்' 'தொண்டை வேந்தன்' என்று கூறப்படுதல், நந்திக் கலம்பகத்தாலும் நன்கறியப்படும்.