பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 203 பஞ்சவன்...பணிந்தேத்தும் வரனே கோநெடுமாறன்... கொண்டாடுந் தென்றிருமாலிருஞ் சோலையே" என்று திருமங்கையாரும் அவர் காலத்தவரான பெரியாழ் வாரும் சிறப்பிக்க நேர்ந்திராது என்றே சொல்லலாம். ஆகவே, பரமவைஷ்ணவர்களாகப் பல்லவரும் பாண்டியரும் விளங்கிய எட்டாம் நூற்றாண்டே,மேற் குறித்த திருவாக்குக்கள் உண்டான காலமாகவேண்டும். திருமங்கையார் காலத்துப் பாண்டியன், பெரியாழ் வார்க்கு அடியவனாக மேலேகூறிப்போந்த இராஜசிம் மனாகிய நெடுமாறன் அல்லது மாறவர்மன் ஆவன். அக் காலத்துச் சேரவேந்தன் இன்னான் என்பது, குலசேகரப் பெருமாளைப்பற்றிக் கூறுமிடத்து நன்கு விளங்கும். சோழவரசர் இக்காலத்தே பல்லவர்கீழ்ச் சிற்றரசரா யிருந்தவரே; ஆதலால் தம் தலைமையரசர் கொண்டிருந்த சமயத்தையே அவரும் தழுவியவராயிருத்தல் கூடிய •தாம். 8-ம் நூற்றாண்டில் தலைமை வகித்த பல்லவமல்லனது' திருமால்பத்திச்சிறப்போ, ஏற்கவே நன்கு அறியப் பட்டது. மேற்குறித்த பாசுரத் தொடரில், பார்மன்னர் மன்னர்' என்று திருடங்கைமன்னன் கூறுவது தங்காலத்துப் பல்லவவேந்தனை யென்றே சொல்லலாம் "உலகிற் பலராய்ப் பலவேந்தர் வணங்குகழற் பல்லவன் "துளங்கு நீண்முடி யரசர்தங்குரிசில் தொண்டை மன்னவன் * 1. 'பார்மன்னர் என்பது இப்போதைப் பாடமாயினும், ஒருமையாகக் கெள்ளுதவே ஈண்டுப் பொருந்தும்.