உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

208 ஆழ்வார்கள் காலநிலை பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சித்திரளை' ஒப்ப ஐக்கள் போதவுந்த வுந்தமர் காண்மின் என்று செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாஞ்சிரி யாமுன்னம் வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே" என்பதாம். பப்பவப்பர் கொண்ட கிழத்தனம் இகழத் தக்கது; சீத்திரள்போலக் கோழைகள் சிந்தும்படி நிற்கும் உங்கள் பந்துவின் நிலையைப் பாருங்கள்' என்று மகளிர் நகையாடுவதற்கு முன்பே நாம் வதரியை வணங்குவோம் என்பது இப்பாடற் கருத்து. இதன் முதலிரண்டடிகள் “தாம் இனி அடையப் புகும் மூப்பைக் கண்டு மகளிர் இகழுங்கூற்று இது”- என்று அப்பெண்டுகள் வாய்மொழியாகக் கொண்டு மொழிந்ததே என்பது எளிதிற் புலப்படும். பப்பவப்பர் என்ற அப்பெண்டுகள் கூற்றுத் தம்மை யன்றிப் பிறரை நோக்கியதாயின், 'அப்பிறர் மூத்த படியைக் கண்டு மகளிர் சிரிக்குமுன்பே நெஞ்சே! நாம் வதரி வணங்குவோம்' என்று ஆழ்வார் கூறுவாராயினர் என்ற கருத்து, அத்துணை ஏற்புடைத்தாகாமை காண்க. இதனால், பப்பவப்பர் என்று நாட்டார் தம்மை அழைத்து வந்தனரென்பதும், அதுபற்றியே அப் பெயரை மகளிர் கூற்றில் வைத்து ஆழ்வார் தம்மைக் குறித்துக் கொள்ளலாயினர் என்பதும் பெறப்படு கின்றன, பப்பவப்பர் யார்? இப் பப்பவப்பர் என்ற தொடர், பப்பராகிய அப்பர் என்று விரியும். அப்பர் என்பது தந்தையை மட்டு மன்றித் தெய்வங்களையும் பெரியோர்களையுங் குறிக்க