பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 217 மாமல்லபுரத்தே கடற்கரையில் இருந்தனவாக மேற்குறித்த சிவாலய மிரண்டும்--இராஜசிம்மன், க்ஷத்ரியசிகமணி என்ற இவன் பெயர்கள் கொண் டிருத்தலின் இவனே அவ்வாலயங்களை நிருமித்த வனாவன் என்று, சாஸனவறிஞர் கருதலாயினர்', இக் கருத்து ஏற்புடையதென்னத் தடையில்லை. இவ்வாறு 7-ஆம் நூற்றாண்டிறுதியிற் பல்லவன் பிரதிஷ்டித்த சிவமூர்த்தத்தோடு திருமால் ஆங்குக் கோயில் கொண்டுள்ளதனையே-"பிஞ்ஞகனோ டிணங்கு திருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம் " என்று திருமங்கைமன்னன் பாடுதல் அறியத்தக்கது. இத்திருமால் கோயில், ஆங்குச் சிவாலயங்களெடுத்த இராஜசிம்மன் காலத்துக்கும் முன்பே உள்ளதாகும். சிறந்த கற்பனை அப்பல்லவனது ஆஸ்தானத்து விளங்கியவரென்று தெரியவரும் மகாகவியான தண்டியாசிரியர் தாம் இயற்றிய அவந்திசுந்தரிகதையின் தொடக்கத்தே, மாமல்லபுரத்துக் கடற்கரைக்கோயிலிற் பள்ளி கொண்டருளிய திருமால் மூர்த்தத்தின் மணிக்கட் டொன்று பின்னமுற்றதைச் செப்பனிட்ட சிற்பியின் விருப்பப்படி அவனுடன் ஆங்குச்சென்று தரிசித்த போது, அப் பெருமானது திருவடிகளைக் கடலலைகள் மோதியலம்பும்படி மூர்த்தமிருந்த நிலைமையைச் சிறப்பிப்பதோடு, அவ்வாறு மோதிய அலையொன்றால் அப்போதவர்ந்த செந்தாமரையொன்று அப்பெருமான் திருவடிகளில் வீழ்த்தப்பட்டதென்றும், அம்மலர் 1. Ep. Rep. No. 961 of 1913, pp 88-9,