பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளை நடை யந்தணீர்." (கலித். 8) " செக்கர்கொள் பொழுதினான்....... முக்கோல்கொ ளந்தணர் முதுமொழி நினைவார்போல்," (ஷை. 129) “ கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப" ( முல்லைப்பாட்டு, 3) எனச் சான்றோர்கள் இப்பகவரைச் சிறப்பித்தல் காண்க. இவற்றுள், அந்தணர் என்பதற்குக் காஷாயம் போர்த்த - குழாங்கள்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். 1 நூலே கரக முக்கோல் மணையே ஆயுங் காலை யந்தணர்க் குரிய" (தொல். மரபி, 70.) என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுவதும், பகவரான இத்திரிதண்ட சந்நியாசிகளையேயாம்.1 இம்முக்கோல் முனிவர், தலயாத்திரையாகத் தமிழக மெங்குஞ் சஞ்சரித்து வருபவரென்பது, அகத்திணைக் 'களவியலில் முக்கோற் பகவரை வினாதல்” என்ற உடன்போக்குப் பகுதியுள்வருங் துறையாலும் தெரியலாம், 1. இவரைக் குடீசக சந்நியாசிகள்' என்பர் வட நூலார். 2. “உடன்போய தலைவியின் பின் சென்ற செவிலி இடைச்சுரத்து முக்கோற் பகவரைக் கண்டு, 'இவ்வகைப் பட்டாரை ஆண்டுக் காணீரோ' என வினவியாட்கு அவரைக்கண்டு அஃது அறமெனவே கருதிப்போந்தேம்;