பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டரடிப் பொடியாழ்வார் 243 நுமர்களைப் பழிப்ப ராகி னொடிப்பதோ ரளவி னாங்கே அவர்கடாம் புலையர் போலு மரங்கமா நகரு ளானே ( க்ஷ 43). என்ற இவர் அருளிச்செயல்களால் நன்கறியப்படும், சாதிச் சிறப்பினும் ஞானச்சிறப்பை இத்துணையாக மதித்த உயர்குலத்துத் திருமாலடியாருள் இப்பெரியாரி னும் சிறந்தார் வேறிலர் என்னலாம். இனி, திருமங்கை மன்னன் திருவரங்கப் பெரு நகரின் சுற்றுத் திருமதிலையும் சிகரங்களையும் பெருஞ் செலவிட்டுக் கட்டுவித்துவந்த காலத்தே “ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் பெரியபெரு மாளுக்குத் திருமாலைசேர்க்கிற இடம் நேர்பட, அவ்விடத்தைத் தப்பியொதுங்கத் திருமதில் கட்டு வித்தருளத் தொண்டரடிப் பொடிகள் பார்த் தருளித் திருவுள்ள முகந்து, தாம் திருமாலை கொய் கிற ஆயுதத்துக்கு அருள் மாரி என்ற இவருடைய திருநாமஞ் சாத்திப் பிரீதராயருளினார்” என்ற வரலாறு குருபரம்பரைகளிற் கூறப்படு கின்றது. இச்செய்தியால் திருமங்கையாரும், தொண்ட ரடிப் பொடிகளும் ஒருகாலத்தவர் என்பது பெறப்படும். ஆழ்வார்களெல்லாம் ஒருகாலத்தவராகத் திவ்யசூரி சரிதம் குறிப்பிடும் செய்தியோடு, இஃது ஒருபுடை ஒத் திருத்தல் அறியத்தக்கது. அன்றியும், மேலே கூறியவாறு, 7-ஆம் நூற் றாண்டில் திருமங்கையார் காலத்தே சமணர் முதலிய புறச்சமயிகள் வைதிகசமயக் கடவுளரை இகழ்ந்து வந்த - 1. ஸ்ரீ பின்பழகியபெருமாள் சீயர் ஆறாயிரப்படி குருபரம்பரை. பக். 55.