பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

256 ஆழ்வார்கள் காலநிலை பாண்டிய சோழரது ஆதிக்கம் பெருகிநின்ற பிற் காலத்தே, முற்கூறியவாறு கொங்குநாடுங் கருவூரும் சேரரால் முற்றுங் கைவிடப்படவே, கடன்மலைநாடான மலையாளமே கேரள பூமியாகவும், அதன் துறைமுக மான இக்கொடுங்கோளூரே சேரரது தனித்தலைநக ராகவும் ஆயின. அன்றியும் ஆதித் தலைநகர்க்கு வழங் கிய வஞ்சியென்ற சிறப்புப் பெயர், இப்பட்டினத்துக் கும் பிற்பட வழங்கியது.' இங்ஙனம் முற்றும் மாறி நின்ற காலத்திலன்றிக் கருவூருங் கொடுங்கோளூருமாகிய இரண்டு தலைநகரங் களையுங் கொண்டு சேரவேந்தர் ஆண்டுவந்த கால விசேடமே நம் குலசேகரர்க்கு உரியதெனலாம். மேற்கூறியவாறு '8-ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் இருந்தவர் என்று தெளியப்பட்ட இவ் வாழ்வார் கடன்மலை நாடான மலையாளப் பிரதேச மொன்றனையே ஆண்டுவந்த கேரள வேந்தராயின் தமக்கு அந்நாட்டுத் தொடர்புண்மையைத் தவறாது அவர் குறிப்பித்தற்கு. உரியரன்றோ ? அங்ஙனம் ஒரு குறிப்பும் அவர் வாக்கில் இல்லாமையோடு, “கொங்கர் கோன் (கொல்லிநகர்க் கிறை' என்றே அவர் தம்மைக் கூறிக்கொள்ளுதலின் கொங்கு நாட்டை, உட்கொண்ட பழைய சேரமண்டல முழுமைக்கும் அவர் தனியரசராயிருந்தவர் என்பதும், கோயிலிற் கண்டதும், குலோத்துங்கசோழன் ஆட்சியில் அமைந்ததுமான சாஸனமொன்றில் 'வெங்கால நாட்டு வஞ்சிமாநகரமான கருவூர்' என்று வரையப்பட்டிருத்தலும். எங்கொள்கையின் உணமையை விளக்கக் கூடியது. (AD Rep. Nos. 335, 349 of 1928.) 1. பெரியபு, சேரமான் பெருமாள், 46; சிலப், பதிகம்,. 1. அடியார் உரை.