உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

260 ஆழ்வார்கள் காலநிலை கொல்லத்தை முற்பட்டவரான இவ்வாழ்வார்க்கு உரிய தாக்குதல் பொருந்தாது என்க, எனவே, மேற்கூறியவாறு கருவூர் அல்லது கொல்லி என்ற நகர்க்கு அரசர் என்பதே 'கொல்லி நகர்க் கிறை' என்பதற்குப் பொருளாதல் கண்டு கொள்க. இவ்வாறு இவ்வாழ்வார் உண்ணாட்டுத் தலைநகரில் இருந்து ஆட்சி நடத்தியவரே யாயினும், இவர் மரபின ரான யுவராசர்களும் பிரதிநிதிகளும் கொடுங்கோளூரில் வாழ்ந்து சேரநாட்டின் பகுதியை ஆண்டுவந்திருத்தல் கூடியதேயாம். உறையூர்ச் சோழர் குலத்தோர் புகாரை யும், மதுரைப் பாண்டியர்மரபினர் கொற்கையையும் இராஜஸ்தலங்களாகக் கொண்டு இவ்வாறே ஆட்சி புரிந்து வந்தமையும் ஒப்பிடத்தக்கது. இவற்றால், கொடுங்கோளூர்க்கு மிகவணித்தாயுள்ள திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்துவந்த சேரமான் பெருமாள், குல சேகரர் அரசு துறந்தபின் பட்டம் பெற்று, தமக்கு விருப்பமுள்ள கொடுங்கோளூரையே தம் தலைநகராகக் கொண்டு கொங்குநாடு உட்பட்ட சேரமண்டல முழுமை யும் ஆண்டு வந்தனர் என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகின்றது. 10ஆம் நூற்றாண்டினனாகத் தெரியும் வீரநாரா யண வீரகேரளன் என்ற சேரன் காலத்தும் கொங்கு நாட்டின் பகுதி சேரவேந்தர்க்கு உரியதாயிருந்த செய்தி சாஸனத்தால் அறியப்படுதலின், குலசேகராழ்வார் சேரமான் பெருமாணாயனார் காலங்களில் அவ்வுரிமை யாட்சி அவர்க்கிருந்த தென்பதில் ஐயமில்லையாம், 1. Ep Rep. 706 of 1905.