உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

270 ஆழ்வார்கள் காலநிலை மேற்கூறிய கொங்குச்சேரர்களுள் 9ஆம் நூற் றாண்டில் ஆதித்த சோழனுக்கு நட்பினனாயிருந்த 'கோக்கண்டன் இரவி என்ற சேரவேந்தனைச் சந்திராதித்த குலத்தவனென்று சாஸனங் கூறுதலின், அவனுக்கு ஒன்றரை நூற்றாண்டுகட்குமுன் சோழபாண்டியத் தொடர்புடையராயும், கொங்கர்கோனுமாயிருந்த நம் குலசேகரப்பெருமாளை, அவன் முன்னோருள் ஒரு வராகவே கொள்வது பெரிதும் ஏற்புடைத்தாதல் காணலாம். இனி, குலசேகராழ்வார், வடமொழியில் சுலோக "ரூபமாய் அமைந்த முகுந்தமாலை என்ற துதி நூலையும் இயற்றியவர் என்று கூறப்படுகின்றனர். அந்நூலின் இறுதிச்சுலோகத்தின் முற்பகுதி, தமிழ்நாட்டார் பாடப் படி, அடியில் வருமாறு: " யஸ்ய ப்ரியௌ ச்ருதிதரௌ கவிலோக வீரௌ மித்ரே த்விஜன்மவர பத்ம சராவபூதாம்" இதனால், பத்மன், சரன் என்ற அந்தணக் கவிசிரேஷ்ட ரிருவர் குலசேகரர்க்கு அன்புமிக்க நண்பினராக இருந் தவர் என்பது புலப்படும், இனி, மலையாள நாட்டிலுள்ள அச்சுப் பிரதிகளில் “மித்ரே த்விஜன் மவரசிவாவபூதாம்" என்ற பாடங் காணப்படுகின்றதென்றும், ஆனால் அந்நாட்டிலே உரை 'யுடனுள்ள முகுந்தமாலைப் பிரதிகளில் யஸ்ய ப்ரியௌ சருதிதரௌ ரவிலோக வீரௌ மித்ரே த்விஜன்மவர பாரசவாவபூதாம் 1. "யா வரொருவர் (குலசேகரர்)க்கு-- வேதவித்துக் களாயும், கவிகளுக்குள் தலைவராயும், பிராமண சிரேஷ்டர் களாயும் உள்ள பத்மன், சரன் என்னும் இருவர் அன்பார்ந்த நண்பினரா யிருந்தனரோ” என்பது இதன் பொருள்.