உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

288 ஆழ்வார்கள் காலநிலை களிலுள்ள ஆன்மகோடிகளும் அவனது பிரஜைகளாவர்' இவ்வுலகத்தவரை ஈசன் தனிக் கோல் செலுத்தி ஆளும் முறையில் ஒருதலைச் சார்பு மலிந்துள்ளன என்று ஆழ்வார் பெரிதும் வருந்துகிறார். "சாம்ராஜ்யக் கொள்கை” என்றால், அது ஈசனதே ஆயினும், ஆட்சிக் கேடுகள் உடையது தானே! அங்ஙனமே பகவா னாட்சியில் அமைந்த குறைகளும் பல. அப் பிராகிருதமான பரலோகத்து ஆன்மாக்களை - மாயாபந்தம் அற்றவராகவும், பிறப்புப் பிணி மூப்பு இறப்பற்ற நித்தியராகவும், ஞான பரிபூரணராகவும் தன் சாம்யத்தோடு அந்தமிலின்பமான சுதந்திரம் பெற்றவராகவும் வைத்து, பரமன் அவரைப் பராமரிக் கின்றான். பிராகிருத உலகத்தவரான தேவர் மனிதர் முதலிய ஆன்மாக்களை மாயை வசப்படுத்தியும் ஆன்ம ஞான மற்றவராக்கியும் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும் உழலும்படி செய்தும் தெய்வபேதம் சமய பேதங்களால் பிளவு படுத்தியும் பெருந் துயரங் களில் ஆழ்த்துகிறான். இத்தகைய ஆட்சி அநீதிகளை எடுத்துக் கூறி ஆன்மகோடிகளை உய்யச் செய்வார் உளராயின் அவர்களைப் பலவகையானும் சோதிக்கிறான் பகவான், அச்சோதனைக்குந் தளராது நிற்பாரானால், அவர்க்கு முத்திபத மளித்து தன் வசப்படுத்தி விடு கிறான், இவை யாவும் அவனது மாயமயக்குகளே. இம் மயக்கெல்லாம் நீங்கி ஆன்மாக்கள் உய்யுமாறு செய்யும் திருவுள்ளம், தம் பெருங் கருணையால் நம் ஆழ்வார்க்கு உண்டாகியது. அதனால், இவர் தாம் பெற்ற பேற்றைத் தம் போன்ற பெத்தான் மாக்களை நோக்கி-- போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே