பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 295 சேவலன்னம்......ஈனில் இழைத்துப் பாதுகாக்கின்றாற்போல” (திருக்கோ . 369 உரை ,) என்ற முன்னோர்கூற்றுக்களால் அறிக, பிறந்த இன் இல்' (= அவதரித்த இனிய வீடு) எனப் பிரித்துப் பொருள் கண்ட, பெரியாரும் உளர். அவர்க்கு, பிறந்த ஈன் இல் என்ற இப் பிரிப்பும் பொருளும் பெரிதும் ஏற்புடைய வாகத் தடையில்லை. 2. அத்திருமொழி நான்காம்பத்து 'மரவடியை' என்ற பதிகத்தின் முதற்பாசுரத்தில் "திருவடிதன் திருவுருவுந் திருமங்கை மலர்க்கண்ணுங் காட்டிநின்ற உருவுடைய மலர்நீலங் காற்றாட்ட வோசலிக்கு மொளியரங்கமே” எனவரும் அடிகளில் 'ஓசலிக்கும்' என்பது வழங்குகிற பாடம், இதற்கு 'நீலம் காற்று ஆட்டுதலால் அசையப் பெற்ற' என்றும், “ஒ-வியப்பு; அசையுமாம்” என்றும் பொருளும் குறிப்பும் தரப்பட்டுள்ளன. ஓதப்படும் பாடத்துக்கு ஏற்றபடி, இப்பொருள் அமைந்துளது என்றே சொல்லவேண்டும். எனினும், ஓசனித்தல் என்ற வினைச்சொல் ஒன்று பழைமையாகவே தமிழில் உண்டு. இதற்குத் தலையெடுப் பாதல், இடம் விட்டுப் பெயரமுயலுதல், சிறகடித்தல் என்ற பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ' வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர ஓசனிக் கின்ற வுறுவெயிற்கடைநாள் (சிலப். 10, 124-5)