பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 ஆழ்வார்கள் காலநிலை ஆழ்வார் வரலாறுகளைப்பற்றிய கொள்கைகள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி அம்மதப் பிர வர்த்தகர்களான பெரியோர்கள் இருவகைப் பிரிவினர் ஆவர். அவர்களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்பர். இவர்களுள் ஆழ்வார்களென்போர் அவதாரபுருஷர்க ளாகவும், ஞானபரிபூரணர்களாகவும், வைஷ்ணவ சம யத்தின் முதல்வர்களாகவும் விளங்கினவர்கள். ஆழ்வார் என்பதற்கு 'பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடு வோர்' என்று பொதுவாக உறுப்புப் பொருள் கூறப் படுவதுண்டு. இப்பெயர் வழக்கிற்குத் திவ்யப் பிர பந்தங்களிற் பிரமாணம் காணப்பட்டிலதேனும், பண் டைச் சாஸனங்களினும் நூல்களினும் இச்சொல் பெரி தும் பயின்றுளது. 1 1. சோழசாஸனங்களில் - 'ஆழ்வார் திருவரங்க தேவர்க்கு ' s.i i. iii. p. 150) 'திருவத்தியூராழ்வாரைப் பாடியருளின ஸ்ரீ பூதத்தாழ்வாரும்' (ஷ, பக். 164) என்று திருமால்மூர்த்தங்கட்கும், ‘தீக்காலி வல்லத்துத் திருத்தீக்காலி யாழ்வாரை" ‘மதுராந்தகன் கண்டராதித்தனார் ஆழ்வாரை ஸஹஸ்ரகலச மாட்டுவிக்க' (க்ஷ பக். 102) என்று சிவமூர்த் தங்கட்கும், 'ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் (ஷை. ii. பக், 69), 'நம்பெருமாள் (அபயன்) திருத்தங்கை யார் மதுராந்தகியாழ்வார்' (க்ஷ, iv. பக். 18) குலோத் தங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார்' (ஷ பக். 35} என்று அரசர்குல மகளிர்க்கும், 'வாணகோவரையர் தங்க ளாச்சி...விச்சா திரியாழ்வார்' (ஷை. பக். 153) 'கருணாகரனா ரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி யுடையாழ்வார்' (க்ஷ. No. 862) என, அரசரைச் சார்ந்த தலைவரின் மகளிர்க்கும் வழங்கதலே யன்றி, நூல்களில்*இனிப் பிறக்கக்கடவ மயித்திரியாழ்வாரான புத்ததேவர்க்கு'