உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 முன்னுரை குரியன. இவற்றை, அவ்வாழ்வாரைப் பற்றிக் கூறு மிடத்து விவரிப்பேன். சங்க காலத்துக்குப் பிற்பட்டார் சரித்திரவறிஞரெல்லாங் கருதுமாறு, ஆழ்வார்கள் கடைச்சங்ககாலத்துக்குப்பின் வாழ்ந்தவர்களே என்பது, சங்க நூல்களிலும் சாஸனங்களிலும் நன்குபயின்றவர் யாவரும் எளிதில் அறியக்கூடியதென்பதில் ஐயமில்லை. இவ்வாறு, ஆழ்வார்கள் சங்கத்துக்குப் பிற்பட விளக்கியவர்களே என்பது ஆராய்ச்சியில் தெளிவாகப் பெறப்படுமாயின் அதனை மறைப்பது எதன் பொருட்டு அதனால் அவர்களது இணையற்ற பெருமைக்குவந்த குறைவென்னை? ஆசாரியர்களெல்லாம் பிற்பட அவதரித் திருப்பதால் அவர்க்கு நேர்ந்த இழுக்குண்டோ ? ஆதலால், இத்தகைய ஆராய்ச்சியின் பயனான முடிவு களை அகாரணமாகப் புறக்கணித்தல் நல்லறிஞர்க்கு உரியதன்றென்க, நாதமுனிகள் காலத்திற்கு முன்னே ஆழ்வார்களெல்லாம், ஆசாரியருள் தலைவரான ஸ்ரீமந் நாதமுனிகட்கு முற்பட்ட காலத்தவர் என்பது மேலே கூறப்பட்டது. அக்காதமுனிகள் கி, பி, 823-ல் அவதரித்தவர் என்பது, பிரபந்நாமிருதம், கோயி லொழுகு முதலிய நூல்களால் தெரியலாம். இக்காலம், மற்ற ஆசாரியபரம்பரைகட்கு மிகவும் இயைந்துவரு கின்றது. 823-ல் அவதரித்த நாதமுனிகள் 918-ல் பரம பதித்தார் என்று அந்நூல்களினின்று நாம் அறியலாகும், இதனால் அப்பெரியார் 95 திருநஷத்திரங்கள் எழுந்தருளி யிருந்தவர் என்பது பெறப்படும். பரமயோகியாகக் கூறப்படும் அவர்க்கு இவ்வயது பெரிய துமில்லை. இவ்