உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

61 திருமழிசையாழ்வார் உண்டாகும் நோக்கத்துடன் அவ்வாறு பாடப்பெற்றன என்பதையுங் குறிப்பிக்கக் கூடியனவாம். ஆனால் பொதுப்பகைவரான புறச்சமயிகளுடன் பெரும்போர் புரிந்து சநாதனதர்மங்களைப் போற்ற வேண்டியிருந்த. நிலையில், வைதிகர்களான தங்கட்குட் பெரிய விரோதங்களை வளர்த்துக்கொள்ள அவ்விரு சாராரும் விரும்பியிரார் என்றே கருதலாம். சைவவைணவ வாதம் நிகழ்ந்ததாக அவ்விரு சமய நூல்களினும் பழைய வரலாறு காணப்படாமையும் நோக்கத்தக்கது. இவற்றால், அவைதிகர்களுடன் சமயவாதஞ். செறிந்து நிகழ்ந்த மகேந்திரவர்மனது ஆட்சியின் ஒரு. பகுதியே திருமழிசைப்பிரானுக்கும் உரியகாலமென்று கொள்வது பெரிதும் பொருந்தும் எனலாம். இதற் கேற்ப, குணபரன் என்ற பல்லவன் பெயரையே பொருட் பேறு சிறத்தல்பற்றி இவ்வாழ்வார் திருமாலுக்கு வழங்க லாயினர் என்று மேற்கூறிய கருத்தும் ஏற்புடைய தாயின், அப்பல்லவன் ஆட்சி புரிந்த 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே, திருமழிசையாழ்வாரது வாழ்நாளின் பிற்பகுதியென்று நாம் ஒருவாறு கூறலாம், பரமயோகியாய் நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று இவ்வாழ்வாரைக் குருபரம்பரைகள் ஒருங்கு. கூறுகின்றன. அதனால், இப்பெரியார் 6, 7 ஆம் நூற்றாண்டுகளின் பின் முன் பகுதிகளிலும், இவர்க்கு மூத்தவர்களும் முக்காலமும் உணர்ந்த இருடி'களுமான முதலாழ்வார் மூவரும் 5, 6 ஆம் நூற்றாண்டுகளின் பின்முன் பகுதிகளினும் எழுந்தருளியிருந்தவர்கள் என்று மேற்கூறிய செய்திகளைக் கொண்டு துணிவதில்எவ்வகைத் தடையும் நிகழ இடமில்லை. சோழன் செங்கணானைக் களவழியாற் பாடிய பொய்கையார்