பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 67 யாப்பருங்கலவிருத்தியுடையார் கூறியதும், இவர்கள் யாவரும் பழைய திருமால் சிவனடியார்களாக அமை தலும் மேலே விளக்கப்பட்டன. இவர்களுள் குடமூக்கிற் பகவர் என்ற பெரியார் இயற்றிய நூல் வாசுதேவனார் சிந்தம் என்ற பெயர்பெற்றதென்றும், அந்நூலுள் மிக்குங்குறைந்தும் வரும் செய்யுள்களும் ஆரிடமாம் என்றும் அவ்விருத்திகாரர் குறிப்பிடுவர், குடமூக்கிற் பகவர் என்பது குடமூக்கில் என்ற தலத்துவாழ்ந்த முனிவராகிய திருமாலடியார் என்ற பொருள்பெறும். குடமூக்கில்-கும்பகோணம்; “பாம்பணை மேற் சேர்ந்தாய் குடமூக்கில் கோயிலாக் கொண்டு என்பது இரண்டாந் திருவந்தாதி (97). பொய்கையார் பூதத்தார்களோடும் ஒருசேரவைத்து அவ்விருத்திகாரர் குடமூக்கிற் பகவரைச் சிறப்பித்தலால், அவர்களோடொத்த பெருமையினர் அப்பெரியா ரென்பது தெளிவாகத் தடையில்லை. இனி, அப்பகவர் யாவர் என்று ஆராயுமிடத்து, அவர் திருமழிசைப்பிரான்போலும் என்று கருதும்படி யிருத்தல் கவனிக்கத்தக்கது. இவ்வாழ்வாரைப்பற்றிக் குருபரம்பரைகள் கூறும் வரலாறுகளிலிருந்து, இவர், தம் வாழ்நாளின் பிற்பகுதி யில் திருக்குடந்தை சென்று தங்கி, அங்கே நெடுங் காலம் யோகத்திலெழுந்தருளியிருந்து பின் வீடுபெற்றவ ரென்பதும், அந்நகரில் இவர் இருந்தருளியநாளில் இயற்றிய திவ்யப்பிரபந்தங்களே திருச்சந்தவிருத்தமும் நான்முகன் திருவந்தாதியுமென்பதும் நன்கறியலாகும். ஆகவே, யோகியான திருமழிசையாழ்வாரும் பண்டைத் திருமாலடியாரான முனிவரென்று கூறப்