பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 ஆழ்வார்கள் காலநிலை என, ஈற்றெழுத்தொன்றே மிக்கு வந்திருத்தலும் ஈண்டு ஒப்பிடற்பாலது. இனி, திருச்சந்தவிருத்தத்தை ஆழ்வார் திருக்குடந்தையில் எழுந்தருளியிருந்தபோது இயற்றி யவர் என்பதற்கேற்ப, அந்நகரிற் கோயில்கொண்ட திருமாலை இப்பெரியார் அந்நூலுட் பலபாடல்களாலுஞ் சிறப்பித்துப் பாடுதல் காண்க (56-61).

  • ஆடவர்க ளெவ்வா றகல்வரணி வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா---நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் பொழிற்கச்சி மாண்பு."

என்ற பாடல்' திருமழிசைப்பிரான் அடித்தொண்டரான கணிகண்ணர் என்பார் வாக்காகக் குருபரம்பரைகள் கூறுகின்றன. அவ்வாழ்வார் தன்னைப் பாடாராயின் தன் நகரை விட்டு அகலக்கடவர்' என்று கூறிய பல்லவனுக்கு விடையாக அக்கணிகண்ணர் இப்பாசுரம் பாடியவராதல் வேண்டுமென்பது 'ஆடவர்களெவ்வா றகல்வர்' என்று தொடங்கும் தொடரினின்று அறியத் தகும். இனி யதுகுலத்திலே பிறந்து கோபகுலத் திலே வளர்ந்தருளிய கண்ணனைப்போல, இவ்வாழ் வாரும் ருஷிகுலத்திலே பிறந்து தாழ்ந்த குலத்திலே வளர்ந்தருளினாராயிற்று” என்று திருமழிசையாரது பிறப்புவளர்ப்புக்கள் கூறப்படுவதற்கேற்ப, இவ்வாழ் வார் 1. யாப்பருங்கல விருத்தி, 94; குருபரம்பரைகளில் இவ் வெண்பா சில பாடபேதங் கொண்டுள்ளது. 2. திருச்சந்தவிருத்தம், பெரியவாச்சான்பிள்ளை வியாக் கியான அவதாரிகை.