உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 85 சிவனடியார்களுள் ஒருவனான இந்நெடுமாறனையே பெரியாழ்வார் திருத்திப் பணிகொண்டவர் என்று கொள்வதில் தடைகள்பல நிகழக்கூடியதாதலின், அவ் வாழ்வார்காலத்தவன் இவனுமாகான் திண்ண ம். இனி, இந்நெடுமாறன் பேரன், மேற்காட்டிய வமிசா வளியில் 6-ஆம் எண்ணுக்குரிய மாறவர்மனாவன். இவன் காலம் உத்தேசம் கி. பி. 740-767 ஆகும். இப்பாண்டியன், பல்லவ மல்லனோடும் (715-780), மற்றும் பலருடனும் போர்புரிந்து வெற்றிபெற்ற பெருவீரன் என்றும், கங்கராசன்மகள் பூசுந்தரியை மணந்தவ னென்றும், பாண்டிக்கொடுமுடி சென்றெய்திப் பசு பதியது பதுமபாதம் பணிந்தேத்தி" யவன் என்றும் வேள்விகுடிச் சாஸனம் புகழும், “மான வெண்குடை மான்றேர் மாறன் (வேள்வி குடிச்சாஸனம்). “மற்றவற்குப் பௌத்ரனாயின மன்னர்பிரான்' இராச சிங்கனும்' (சின்னமனூர்ச்சாஸனம்) என்ற சாஸனத்தொடர்களால் இப்பாண்டியனுக்கு நூலொன்று அருமையாக உள்ளது. அதனுட்கண்ட களவிய லுரையுதாரணங்களான கலித்துறைகளின் தலைப்பில், பாண்டிக்கோவை என்ற குறிப்பையான் முதன் முதற் கண்ட போது, அவையாவும் அக்கோவையைச் சார்ந்தன என்று தெரிந்தேன். இலக்கண விளக்கப்பாட்டியல் 116-ம் சூத்திரவுரையுள் - செய்வித்தோன் பெயரான் வந்தன; பாண்டிக்கோவை முதலியன" என்று எழுதப்பட்டிருத்தலாலும் இத்தகைய நூலொன்று முன்பு வழக்கிலிருந்தமை தெளிவாகும்.