உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

நண்பனிடம் நடப்பைச் சொல்லிவிட்டால் என்ன வென்று துடித்தான் அம்பலத்தரசன். ஆனால், அச்செயல் அவ்வளவு விவேகமாகப் படவில்லை. ஆகவே, கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டியவன் ஆனான் அவன்.

பூமிநாதனின் கார் சீனத்துக் கடை வீதியை இலக்கு வைத்தது.

அம்பலத்தரசன் மருள் கொண்டவனாக அப்படியே நின்றான். அதுவரை தோன்றாத புதிய புதிய பயங்கள் அவனை ஆட்கொள்ளத் தலைப்பட்டன. இரவு ஊர்வசி நடத்திய சோதனையில் வென்றவன் ஏன் இப்போது இப்படி வெல வெலத்துப் போய் நிற்கிறான் ?

'தெய்வமே ! என் ஊர்வசியைக் காப்பாற்று! நெஞ்சமே உன் ஊர்வசிக்கு விடிவு காட்டு !மனச்சாட்சியே! என் மனிதாபிமானத்தை ரட்சித்தருள் ! ... விடிகின்ற பொழுது கள் நல்ல பொழுதுகளாகவே விடியட்டும் !...'

விடிந்தது.

5

"குட்மார்னிங், அத்தான்" எ ன் று காலை நல் வணக்கம் சொல்லி, ஒயில் காத்துச் சிரித்தாள் ஊர்வசி,

'குட்மார்னிங், குட்மார்னிங்' என்று பதில் வணக்கம் சொல்லி, அழகு காட்டிச் சிரித்தான் அம்பலத்தரசன்.

அவள் முகம் அழகு கனிந்த நிம்மதியோடு விளங்கியது. ட்டாமாவுத் துகள்கள் அவளது கன்னக் கதுப்புக்களில் ‘காஞ்சம் கூடுதலாகவே காணப்பட்டன. அ வ ள து நளினம் மிகுந்த நேத்திரங்களில் புதிய அமைதி இழைந்தது. அக் கண்களிலே தான் எத்துணை கவர்ச்சி !