உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தான் சொன்ன தமாஷை எண்ணி அவள் சிரிக்க, அவள் சொன்ன ந ைக ச் சு ைவ ைய அவன் ரசித்துச் சிரித்தான்.

போன மனிதர் திரும்பி வந்து, “இதுக்கும் உங்க தஞ்சாவூர் தானோ?” என்று கேட்டு வைத்தார்.

இப்போதும் அவர் தம் கேள்விக் குறியின் விடையை யும் சொல்லாமல் சொல்லிவிடவே, இப்போதும் அவனுக்கு விடையிறுப்பதில் லவலேசமும் கஷ்டம் உண்டாகவில்லை.

"ஆமாங்க" என்றான்.

“நாங்க ஆவணியிலே தஞ்சாவூர் போவோம். அப்போது மறந்து விடாமல் உங்களுக்குக் குடமிளகாய் ஒரு முட்டை வாங்கி அனுப்பி வைச்சிடுறோமுங்க, ஐயா !” என்று சிரிக்காமல் கொள்ளாமல் செப்பினான்.

"தங்கச்சிக்கு ஜோ ஸ் ய ம் கூ ட த் தெரியும்போல இருக்குது நான் மனசிலே நெனச்சதைக் கனகச்சிதமாச் சொல்லிட்டுது : ... மறந்திடப்பிடாது" என்று தேன் குடித்த நரியாக நின்றார் குஞ்சிதயாதம். ஒரு மூட்டை குடமிளகாய் 'ஒசி'யில் கிட்டிவிடுமென்று மனப்பால் குடித்தாரோ, என்னவோ ?

“மறந்திட மாட்டோம் என்று இருவரும் ஒரே குரலில் அவருக்கு 'அபாயம்' அளிக்கவே, பல்லெல்லாம் தெரியக் காட்டிச் சிரித்து விட்டு, அவர் தமது குஞ்சர மேனியைக் கீழே இறக்கிக் கொண்டு மறையலானார் !

மாடிக் கைப்பிடிச் சுவரருகே இருந்த தொட்டித் துளசியின் தளிர்களுக்கு இளம்பொற் கிரணங்கள் முத்தம் கொடுத்து பழகிக் கொண்டிருந்தன.