பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வருங்காலத்தைப்பற்றி நினைத்துப் பார்த்து, நமது யூனிய னுக்கு எத்தகைய அரசியல் தலைவர் அமைய வேண்டும் என்று நாம் பேசி முனையும்போது , நம்மில் பலருடம் தோழர் பொலிக்கர்ப்போலை நன்றியுணர்வோடு வருத்தத்தோடும் நினைவு கூர்கிறோம்: நன்றியுணர்வோடு நினைவு கூர்வதற்குக் காரணம், எந்தவிதமான கோஷ்டிகளோடும் தாய் சேராதிருந்த தன்மையினால் அவர் நமது இலக்கியத்தின் ஒட்டு மொத்தமான வளர்ச்சிக்கு எவ்வளவோ பணியாற்றினார் என்பதே யாகும்; அவரை வருத்தத்தோடு நினைவு கூர்வதற்குக் காரணம், நமது பெரும் துர்ப்பாக்கிய வசமாக, நமது மௌ 6SY" சம்மதத்தோடு, எழுத்தாளனின் திறமை, சதிகாரனின் திறமை ஆகிய இரு திறமைகளையும் மனமுவந்து ஒருங்கிணைக்கும் அந்த இலக்கிய ஆண் பெண் இளவட்டப் பிள்ளைகளால், அவர் இறுதியாக "உயிரோடு தின்று தீர்க்கப்பட்டார் என்பதேயாகும். இந்த இள வட்டங்கள் எழுதிக் களைத்து ஓய்வு பெறும் சமயங்களில் சூழ்ச்சிகளில் இறங்கு கிறார்கள், அந்தோ ! அவர்கள் பெரும்பாலும் தமது முதல் திறமையில் பெறும் வெற்றியை காட்டிலும், இரண்டாவது திறமையிலேயே அபார வெற்றி காண்கின்றனர், " வித்தரத்துர்னயா கெஜத்தாவுக்கு, எந்தவொரு கோஷ்டியைச் யும் அல்லது கோஷ்டிச் சேர்க்கைகளையும் சேராத ஓர் ஆசிரியரே, சோவியத் இலக்கியத்துக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அதன் தலைமைப் பூசாரிகளுக்கு - அவர்கள் சிமனோவ், ஃபதயேவ், இரென்பர்க் அல்லது ஷோலகோவ் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்களுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளாத ஒரு நபரே தேவை. நமது பத்திரிகையின் ஆசிரியர் இலக்கிய விஷயங்களில் துணிவுப் உறுதிப்பாடும் மிக்கவராக, அதற்கும் மேலாக அவர் முற்றிலும் நேர்மை மிக்கவராக இருந்தாக வேண்டும். தோழர்களே, அத்தகைய ஆசிரியரைப்பற்றி நாம் 'கனவு கண்டால் மட்டும் போதாது. அத்தகைய ஆசிரியர் ஒருவரை நாம் கோரியாக வேண்டும். அவ்வாறு கோருவதற்கான சட்டபூர்வமான, மறுக்க முடியாத உரிமை நமக்கு உண்டு, மீண்டும் விமர்சகர்கள் விஷயத்துக்கு வருவோம்; இவர்கள் ஒரு நடுத்தர எழுத்தாளர், அல்லது பிரபலமடையாத அல்லது அரும்பி வரும் . எழுத்தாளர் ஒருவரின் பலவீனமான கதை யொன்று அச்சில் வெளிவரும்போதே மீண்டும் உயிர்த் தெழுகிறார்கள் என்றே கூறலாம். இவ்வாறு நிகழும்போது, நமது விமர்சகர்கள் தமது சக எழுத்தாளர்களின் ஆடைகளை மீண்டும் உரிந்து விடுகின்றனர்-இந்த உருவகத்தைப் பயன்படுத்துவதற்

காக என்னை மன்னித்து விடுங்கள்--பின்னர் அவர் களது

270