பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் ஆக வேண்டும். அவரது புத்தகத்தைப் பற்றிய ஒரு பரந்த ஆக்க பூர்வமான விமர்சனமே, எது சரியானது, எது தவறானது என்பதை அவரைக் கண்டு கொள்ளுமாறு செய்யும் தலைசிறந்த சாதனமாகும். மிக மிக வீண் கௌரவம் பிடித்த மனிதரும் கூட--விவேக புத்தியில் இயற்கையானது அவரை ஏமாற்றி விடாது இருக்குமானால்-- 'படையினர் அனைவரின் நடையும் ஒழுங்கு கெட்டுச் சீர்குலைந்து போயிருக்கும் நிலையில், படையின் சார்ஜெண்டின் நடை மட்டும் ஒழுங்கு கெடாமல் சீரோடு இருந்துவிட முடியாது" என்பதை அவர் அப்போது புரிந்து கொள்வார். மிகவும் உணர்வு பூர்வமற்ற விமர்சனத்துக்கோர், உதாரண மாக , இலியா இரென்பர்க்கின் உருகும் பணி என்ற கதையைப் பற்றிய கான்ஸ்தாந்தின் சிமனோவின் கட்டுரையை ஒருவர் குறிப்பிட்டுக் கூறலாம். சிமனோவ் அந்தப் புத்தகத்தின் குறைபாடுகளைப் பற்றி வெளிப்படையாகவும் கூர்மையாகவும் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, அவர் அவற்றைப் பூசி மெழுகியிருக்கிறார். சிமனோவ் இந்தக் கட்டுரையை எழுதிய போது, அவரை வழி நடத்திச் சென்றது இலக்கியத்தின் நன்மை பற்றிய நோக்கம் அல்ல.. இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு மதிப்புரை எழுதும்போது, விமர்சகர்கள் ஒரு தந்தையின் கண்டிப்புடனும் அக்கறையுடனும் அவர்களை மதித்து நடத்தியாக வேண்டும், பொன்னிறக் கழுகு தனது குஞ்சுகளுக்கு எவ்வாறு பறக்கக் கற்றுக் கொடுக்கிறது என்பதைப் பற்றி என்னிடம் ஒருமுறை கூறினர். அது அவற்றைச் சிறகை விரித்துப் பறக்கச் செய்கிறது; அவற்றைக் கீழே இறங்க அனுமதிக்காமல், அவற்றை மேலும் மேலும் உயரே பறந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறது; அவை முற்றிலும் களைப்படையும் வரையிலும் அவற்றை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறது. இவ்வாறுதான் ஓர் இளம் பொன்னிறக் கழுகு வானில் உயரப் பறந்து செல்லக் கற்றுக் கொள் ளும்....... நமது இளம் எழுத்தாளர்களைப் பயிற்றுவிப்பதில், நாம் இந்த முறையைத்தான் பயன்படுத்த வேண்டும்; மேலும் மேலும் உயரே ஏறிச் செல்லுமாறு அவர்களை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்; அப்போதுதான் இதன் பzனாக அவர்கள் பயந்தாங் கொள்ளிக் காகங்களாகவோ, வீட்டுப் பொட்டைக் கோழி களாகவோ இல்லாமல், இலக்கியத்தில் உண்மையான கழுகு களாக உருப்பெறுவார்கள். ஆயினும் பொன்னிறக் கழுகானது தனது குஞ்சுகள் முதல் முயற்சியிலேயே தேவைப்பட்ட உயரத்துக்குப் பறக்க இயலாவிட்டாலோ அல்லது அவ்வாறு 889