பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

203



‘யோகக் கலைக்கு

ஒரே ஓர் இதழ்!

புகழ்பெற்ற தமிழ்ப் பதிப்பகங்களில் ஒன்றாக நிலைத்துவிட்ட பாரதி பதிப்பகம் நடத்தும் திங்கள் இதழ் யோகக் கலை! பதிப்பகத்தின் திறமையாளராக விளங்கிய தெய்வத்திரு பழ. சிதம்பரம் அவர்களின் ஆற்றல்மிகு மக்கட் பேறுகளான பழ. சி. இராசேந்திரன், பழ. சி. மணி, பழ. சி. வைத்தியநாதன், பழ.வெங்கட் ஆகியவர்களின் கடும் உழைப்பின் எதிரொலியாக இயங்கி வருகின்ற ‘யோகக் கலை’ பத்திரிகையில்; யோகாசனம், தியானம், இயற்கை மருத்துவம் மற்றும் வரலாற்றுச் சம்பவ நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன.

மொத்தத்தில், ‘யோகக் கலை’ விஞ்ஞானிகளான பதினெண் சித்தர்களின் ஒரே ஒரு குருகுல இதழாக ‘யோகக் கலை’ பத்திரிகை உலா வந்து, ஆரோக்கிய வாழ்வை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

“நக்கீரன்” தொண்டு

“invincible” லா?

தருமி என்ற கவிஞனின் வறுமை ஒழிய ஆலவாயப்பன் எழுதிக் கொடுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவிதையிலே பொருட் குற்றம் கண்ட புலவர் பெருமான் நக்கீரரைப் பார்த்து : ‘கீர் கீரென்று அறுக்கும் கீரனோ என் கவியை ஆராயத் தக்கவன்?’ என்று கொந்தளித்தக் கோபத்தோடு மதுரை சொக்கேசர் பெருமான் பாண்டியன் அவையிலே பொங்கினார்!

‘சங்கறுப்பது எங்கள் குலம், தம்பிரானுக்கு ஏது குலம்?’ என்று நக்கீரர் “நா” பெருமான் முன்பு சீற்றமாட, அதைப்