பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு


துரத்தப்படுவார்கள். அதாவது பால கங்காதர திலகர் தனது ‘கேசரி’ பத்திரிகையில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து எழுதியதற்கு பர்மாவிலே உள்ள மாண்டலே காராக்கிரகத்திலே பூட்டிக் கொடுமைபடுத்தியதைப் போல, இப்போது 1887-ஆம் ஆண்டில் வந்த சட்டமும் பத்திரிகை ஆசிரியர்கள் நாடுவிட்டு வேறோர் நாட்டுக்கு விரட்டியடிக்கப்படுவர் என்பதுதான் அந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒருவேளை அந்த ஆசிரியர்கள் நாடு கடத்தப்படுபவராக இல்லாவிட்டால், குறைந்த அளவு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

அந்தச் சட்டம் இந்தியன் பீனல் கோடு 124A, 153A, 505 ஆகிய பிரிவுகளுக்கு ஏற்றவாறு அமல்படுத்தப்பட்டு தண்டனைகளை வழங்கும். எனவே, மேற்கண்ட பிரிவுகளால் இணைக்கப்பட்ட அராஜகம் சட்டம் இது.

9. 1878-ஆம் ஆண்டில் வெளியான
இந்திய மொழிப் பத்திரிகைச் சட்டம்
(THE VERNACULAR PRESS ACT OF- 1878)

மேயோ பிரபுவும், ஜான் லாரன்சும் கொண்டு வந்த இந்த சட்டம், பத்திரிகை ஆசிரியர்கள் இடையே பெரும் எதிர்ப்பைப் பெற்றது. அதனால்; இதழ்கள் உலகமே புரட்சி மனப்பான்மை என்ற தீ வளைய வட்டத்துக்குள் நுழைந்து தங்களையே தியாகம் செய்யத் தயாரான நேரத்தில், தலைமை ஆளுநராக அப்போது பொறுப்பேற்றிருந்த லிட்டன் பிரபு கொண்டு வந்த இந்திய மொழிகளது பத்திரிகைச் சட்டம் வெளியானது.

லார்டு லிட்டன் ஆட்சியின்போது பத்திரிகைகள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து நெருப்புக் குவியல் நடையில் எழுதின. அதனால் சட்டமெனும் தீயணைப்பு இயந்திரச் சக்தியைப் பயன்படுத்தினால்தான், அந்த நெருப்புக் கனல் நடை எதிர்ப்புக்களைச் சமாளிக்க முடியும் என்று எண்ணிய லார்டு லிட்டன், இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு இந்தியப் பத்திரிகை