பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும் அடக்குமுறைச் சட்டங்கள்!


புறக்கணித்த ஆட்சிக் கொடுமைகளை எதிர்த்து, இந்திய மொழிகளில் பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்திப் போராடின.

மக்களின் அந்த அடிப்படை வாழ்க்கையின் நியாயமான உரிமைகளைத் தங்களது பத்திரிகைகளில் எழுதியும், மனுக்கள் பல கொடுத்தும், நேரிடையாகப் பெரிய அதிகாரிகளைப் பேட்டிகண்டும், தலைமை ஆளுநரைக் கேட்டுப் பார்த்தும் சலித்துவிட்ட காரணத்தால், இந்தியப் பத்திரிகைகள் சற்று காரசாரமாகவே ஆட்சியை எதிர்த்து எழுத ஆரம்பித்தன.

இந்திய மக்களுக்காக கேட்கப்பட்ட உரிமைகளை, வசதிகளை ஆங்கில அரசு வழங்காததோடு, உரிமைக்காக வாதாடும் பத்திரிகைகளை அடக்குமுறைகளால் அழித்துவிடச் சில தடைச் சட்டங்களை இயற்றி அமல்படுத்த ஆரம்பித்தது. அந்தச் சட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர்ந்தால்தான் நாம் எப்படிப்பட்ட ஏகாதிபத்திய வெறிபிடித்த ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தோம் என்பதை ஒரளவாவது அறியலாம் அல்லவா? அந்தச் சட்ட வகைகள் வருமாறு: