பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

பத்திரிகை மன்றம் ஏன்? எதற்காக? எப்படி?


Supreme Court நீதிபதிகளையே பொதுவாகப் பத்திரிகை மன்றத்துக்குத் தலைவராக நியமிக்கப்படுகிறார்கள்.

மன்றம் எப்படி
செயல்படுவது?

பத்திரிகைகள் சுதந்திரத்தைக் காப்பாற்றக் கடுமையாக உழைப்பதும்; செய்தித் தாட்கள், செய்தி நிறுவனங்கள் தரத்தைக் காப்பதும் - வளர்ப்பதுமான பணிகளே அதன் அடிப்படை நோக்கங்களாகும்.

செய்தித் தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில், அதற்கான நெறிமுறை வழிகளை வகுப்பது; மன்றத்தின் பணிகளாகும்.

பத்திரிகைகளும், பத்திரிகைக்குச் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட பத்திரிகை மன்றம் உதவிட வேண்டும்.

செய்தித் தாட்களும், செய்தி நிறுவனங்களும், இதழியலாளர்களும்; பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும், உரிமை உணர்வுகள் உந்துதலோடும் பணிபுரியத் துணையாக இருக்க வேண்டும்.

பத்திரிகைகளை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் தொழில் உறவை வளர்த்துக் கொண்டும், வேண்டிய உதவிகளை அவற்றுக்குச் செய்யும் சூழ்நிலையினையும் பத்திரிகை மன்றம் உருவாக்க உழைக்கின்றது.

மன்றம், பத்திரிகைகளின் அமைப்பு முறை செய்தித்தாள், செய்தி நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொத்துக் குவிந்தால்; அவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்தரமாகச் செயல்படுவதற்கான பரிந்துரைகளை மன்றம் செய்ய வேண்டும்.

அயல் நாட்டார் உதவிகளைப் பெறும் செய்தித்தாட்களை மதிப்பிட்டுக் கூறுவதும் இந்த பத்திரிகை மன்றத்தின் வேலையாகும்.