பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

331


வேதத்தை நமக்குத் தந்த திருவள்ளுவரும், ‘சாகும்வரை நீ படித்துக் கொண்டே இருந்தால்தான் என்ன? அப்போதுதானே எந்த நாடும், எந்த ஊரும் உனக்குச் சொந்த ஊராகும்? அதனால் பல நாட்டு மொழிகளையும் படி’ என்று அறிவுரை கூறுகிறார்.

மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட கோவை. ஜி.டி. நாயுடு, 37 ஆயிரம் நூல்களைப் படித்ததால்தான், அவர் தொழிலியல் விஞ்ஞானியாக மாறி, பல புதிய விஞ்ஞானப் புரட்சிகளைச் செய்தார்.

மராட்டிய மண்ணில்; மாவீரன் சிவாஜி தோன்றிய பூமியில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே என்பவர் ‘இந்து பிரகாஷ்’ என்ற மராட்டிய மொழிப் பத்திரிகையையும், இங்லீஷ் மொழி பத்திரிகையையும் துவக்கினார். அந்தக் கல்வி மேதை, 34 ஆயிரம் சட்டப் புத்தகப் பக்கங்களைப் படித்தவர் என்று ஆங்கிலேயர் அரசு அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி அவரை மராட்டிய மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமித்தது.

எனவே, “Genious is one percent inspirations and ninety nine percent perspiration’’ என்றார் மேதை எடிசன் என்ற விஞ்ஞானி. அதாவது பேரறிவுடைமை என்பது அகத்தூண்டுதல். அது ஒரு சதவிகிதம்தான்; வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் இலட்சியத்திலே ஒருவரால் வெற்றி பெற முடியும் என்றார்.

பத்திரிகை ஆசிரியனுக்கும் மேற்கண்ட தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். பல்பொருள் கூட்டுக் குவியல்தான் பத்திரிகை. பல்பொருள் குழப்பத்தாட்களாக அது இருக்கக் கூடாது. தாறுமாறாக, அலங்கோலமாக நடந்தால் அது சமுதாயத்தைக் குழப்பக் களமாக்கி விடும்.

பத்திரிகை ஆசிரியனுக்குத் தேவை - சிந்தனையில் நேர்மை, நடுநிலை வழுவாத, நியாயமான, ஒரு சார்பற்ற பண்புகளாகும்.

ஓர் ஆசிரியனுடைய எழுத்துக்கள் விரிந்து செல்லும் ஒளிக் கதிர்களை வீசுவதாக விளங்க வேண்டும். அவனுடைய