பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

375


சுதந்திரத்தைப் பறித்தது. மார்க்ஸ் இந்த நிபந்தனையைத் தூக்கி எறிந்தார். ஆசிரியர் பதவியிலே இருந்து விலகி விட்டார்.

பத்திரிகை பங்குதாரர்கள் மார்க்ஸை சந்தித்து “என்ன காரணத்தால் ஆசிரியர் பதவியை விட்டு விலகினீர்கள்?” என்று அவரிடம் நேரிலே கேட்டபோது.

“மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சட்ட சபைக்குள் செல்பவர்களின் கடமை என்ன? என்பதை விளக்கி எழுதினேன்” என்றார்.

ஜெர்மன் அரசின் சுயேச்சதிகார அக்ரமத்தை, அதன் சுய ரூபத்தை மக்களுக்குப் புரியுமாறு விளக்கினேன். ஒரு பத்திரிகையின் நியாயமான கடமை எதுவோ அதைத்தான் எனது பத்திரிகையும் செய்தது.

நான் அவ்வாறு எழுதினேன் என்பதற்காக, ஓர் அரசு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்க, அதன் குரல்வளையை தனது அதிகாரத்தால் நெறிக்கும் போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அத்தகைய ஒரு பத்திரிகை ஆசிரியனாக இருப்பதை விட சும்மா இருப்பதே சுகம்” என்று கூறினார் மார்க்ஸ் அவர்களிடம்.

பத்திரிகை பணம்
பறிக்கும் கருவியா?

“பத்திரிகையைப் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக, வேறொரு வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்வதற்கான ஒரு துணையாகப் பயன்படுத்தக் கூடாது”

“எந்த ஒரு பத்திரிகையும் தனது இலட்சியத்தைக் கைவிடக்கூடாது. வியாபாரத்தில் இறங்கி விடுகிற எந்தப் பத்திரிகையும் சுதந்திரமாக இருக்க முடியாது”

“பத்திரிகை ஆசிரியன் பணம் சம்பாதிக்க வேண்டியது தான். எதற்காக சம்பாதிக்க வேண்டும்? உயிர் வாழ்வதற்காக சம்பாதிக்கலாம். தொடர்ந்து எழுதுவதற்காக பத்திரிகை இருக்க வேண்டுமே, அதற்காகவும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், பணம் கொள்ளை அடிக்கவும், சுயநல வாழ்க்கையை விருத்தி