பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். I. i3. யால் யான் விவரித்துச் சொன்னேன்” என்று சொல்லி வாளா இருந்தான். குந்திகேவி இவ்வாறு பிராமணன் உரைக்கக் கேட்டு, இாக்கம் மிகக்கொண்டு, அவனை நோக்கி, பிராமணரே! நீர் வருந்தவேண்டாம்; இந்த இராசடிசனிடமிருந்து நீங் கள் தப்பிப்பிழைப்பதற்குரிய உபாயத்தை நான் கெரிங் திருக்கிறேன்; ரோவது உமது மனைவியாவது அந்த இராகூ சனிடம் போகவேண்டாம்; உமக்கு ஒரு புத்திரன் உளன்; பெண்ணும் இருக்தியே; எனக்கோ ஐந்து குமாரர்கள் இருக் கின்றனர்;அவர்களுள் ஒருவனே உமக்கீடாக அந்தக்கொடிய வலுக்கு உணவைக் கொண்டுபோகும் ஆளாக அனுப்பு கிறேன்; விேர் கவலவேண்டாம்” என்று சொன்குள். பிராமனன், 'அம்மையே, உனது அருட்குணத்தை மிகவும் பாராட்டுகின்றேன்; ஆளுல் உனது கருத்துக்கு நான் இசை வது கூடாது; நீ கூறியபடி உன் மகனே அவ்வசுரனிடம் பலியாக அனுப்ப நான் உடன்படுவேனுயின், அதிதியாய் வந்த பிராமணனைக் கொன்றவஞய்ப் பிராயச்சித்தமில்லாத பிரமகத்தி தோஷத்துக்கும், அடைக்கலம் புகுந்தோரை அழித்த பெரும்பாவத்துக்குமன்ருே நான் ஆளாகவேண் டும்; சுயாலங் கருதிப் பிறர்க்குத் தீங்கிழைக்கும் இச்செய் கைக்கு நான் ஒருப்படமாட்டேன்; நானே என்னுயிாைக் தியாகஞ் செய்யப்போகிறேன்” என்று சொன்னன். இங் நனம் இவன் கூறக்கேட்ட குத்தி, அந்தணரே நான் என் புத்திரனே அனுப்புகிறேன்' என்று சொன்னது எனக்கு ஐந்து புத்திரர்கள் இருக்கிருர்களென்பதுபற்றி யென்று