பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருகுல வாசம், ஆருணி, உபமந்யு, பைதன். முற்காலத்தில் தவுமியர் எனப் பெயர் வாய்ந்த முனி புங்கவர் இருவர் இருந்தார். அவர் இரும்புபோன்ற பற்களே யுடையவராயிருந்தமையால் அவர் அயோதர்' என்றும் அழைக்கப்படுவார். அம்முனிவர் அக்காலத்தில் தம்மிடம் குருகுலவாசஞ் செய்யவரும் மாணவர்கட் கெல்லாம் வேத வேதாங்கங்களை அன்புடன் போதித்து வந்தார். அவரு டைய சிஷ்யர்களுள் முதன்மையானவர்கள் ஆருணி, பைதன், என்பவர்கள், இவர்களுடன் உபமந்யு என்னும் ரிஷிபுத்திரனும் சேர்ந்து குருகுல வாசஞ் செய்துவங்கான். மாணவர்கள் குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து உற்றுழி:;தவியும், உறுபொருள் கொடுத்தும், ஆணை நெறி கின்று ஒழுகி நிற்பதே குரு குல வாசத்தின் முறைமை யாகும் நோக்கம். இக் கெறி கின்று ஒழுகுவதால் விளை பும் நலமோ கணிக்கமுடியாததாயிருக்கும். இம் மூவரும் சேர்ந்து நெறி கவருது குருகுல வாசஞ் செய்து வருநாளில் ஒரு நாள் தவுமியரது கழனியிலுள்ள தண்ணீரெல்லாம் மடையை உடைத்துக்கொண்டு வெளியிற் போயிற்று.அது தெரிந்து தவுமியர் தம் மாணவருள் ஆருணி என்பவனே கோக்கி, 'ஆருணியே! நம் கழனியின் தண்ணி ரெல்லாம் மடை வழியாய் உடைத்துக்கொண்டு போகிற தாம். நீ விரைவாகச் சென்று அவ்வுடைப்பை அடைப்