பக்கம்:இந்தியா எங்கே.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 109

வீரன்2 :

வான்

வீர.1

வான்

வீர 1

வான்

வீர 1

வான்

டே! இவன் பிச்சைக்காரனில்லேடா. பேச்சுக் காரண்டா.

இவர்கள் தனது நிலையைக் கண்டு கொள்ளக் கூடும் என்ற எண்ணம் வரவே மறுபுறம் கிளம்பி வண்ணம்)

நான் வருகிறேனய்யா பசி போயிட்டுது.

என்னடா ஆச்சரியம் ஒண்ணுமே கொடுக்கலே அதுக்குள்ள திரும்பறே! பசி எப்போதுமே காத்துக் கொண்டிருப்ப தில்லை அய்யா! அக்னிபோல் எழுகிறது. அவ் வேளைக்கு ஒன்றும் கிடைக்கவிட்டால், எழுந்த இடத்திலேயே பதுங்கி விடுகிறது. சித்ரவதை செய்து சோம்பேறி மனிதனை செயலுக்குத் துண்டும். காலம் வந்ததும், எதனையும் மதியாது பொங்கியெழும் பொதுமக்களின் புரட்சி வெள்ளம் போன்றது பசி. அது ஒரு தயவு தாட்சண்ய மற்ற வியாதி, அதில்லாவிட்டால் உலகம் விழிப்பின்றி உறங்கி உறைந்து உளுத்துப் போகும். மனிதனை ஆட்டுவிக்கும் பசியே வாழ்க நீ ஊழித் தீபோல் வாழ்க நான் போகிறேன். ஒரு முதல்தரமான பிரசங்கம் செய்யுமளவுக்கு இவன் தலையிலே பசிவெறி அதிகரிச்சிருக்குதடா டே! வெறும் வயிற்றுப்பசியாலே இந்த மாதிரிப் பேச்சு வராது.டா தம்பி. இது அறிவுப் பசியி னுடைய ஆழத்திலே இருந்து வர மந்திர மூச்சுடா தம்பி! . உஸ். நான் வருகிறேனய்யா. தம்பி. நில், நீ பிச்சைக்காரன் இல்லேங்கறதை உன் பேச்சினுடைய போக்கே சொல்லுதே. யார் நீ, எங்கே வந்தே? -

உஸ். நான் போகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/111&oldid=537674" இலிருந்து மீள்விக்கப்பட்டது