பக்கம்:இந்தியா எங்கே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

15


இன்று அயல் நாடு செல்லும் இந்தியன், தலை நிமிர்ந்து நிற்கும் வீரனாக, தறுகண்மை நிறைந்த தக்கோனாக, பார்ப்போர் மதிக்கும் படிப்பாளியாக உயிர் காக்கும் டாக்டராக, புதிய இயந்திரங்களை இயக்கும் எஞ்சினியராக, அறிவுப்பசி நீக்கும் தத்துவப் போதகனாக, அறியாமை நீக்கும் ஆசிரியனாக, காலத்தை வெல்லும் கலைஞனாக, முன்னேறிய நாடுகளில் விண்னேறிச் செல்லும் விஞ்ஞானிக்கு யோசனை கூறும் அறிஞனாக, அரசியல் ஞானியாக, சமாதானத் துதுவனாகச் சென்று உலகத்தின் உயர்ந்த அறிவுப் பீடங்களில் அரியாசனம் பெற்று வருகிறான். அவனுக்குத் தெரியும் சுதந்திரத்தின் பெருமை என்னவென்று.

இங்கே, உன் கிராமத்தைவிட்டு அப்பால் நகராமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உனக்கு என்ன தெரியும் சுதந்திரத்தைப் பற்றி?

ஏதோ பத்து ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குவது, நீயும் ஒரு குட்டித் தலைவனாவது, அந்தத் தலைமைப் பதவியை நல்ல லாபத்திற்கு - நல்ல கமிஷனோடு மற்றொரு அரசியல் திமிங்கலத்துக்கு விற்பது, வந்த தரகுப் பணத்தைக் கொண்டு வாய்க்கு ருசியாகத் தின்பது, வயிறு நிறையக் குடிப்பது. வழியில் செல்வோரிடம் வம்பு செய்வது, சுகமாகத் தூங்குவது, நிதி வசூலிப்பது, விழா கொண்டாடுவது, ஊர்வலம் வருவது... உனைக்கண்டு எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது- இதுதான் சுதந்திரத்தினால் வந்த பலனா?

ஜனநாயக நாட்டில் ஜனங்களை, ‘ஏமாற்றிய வரை வெற்றி, அனுபவித்த வரை இன்பம், ஜனங்கள் ஏமாந்திருக்கும் வரை பதவி இதற்கு ஊரையே கலக்கிக் கொண்டிருக்கும் உனக்குச் சுதந்திரத்தின் பெருமை தெரிந்திருக்க நியாயமில்லை.

இதுவரை தெரியாவிட்டால் இப்போதாவது தெரிந்து கொள். "வேண்டாம், நான் தெரிந்து கொள்ள வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/17&oldid=1401710" இலிருந்து மீள்விக்கப்பட்டது