பக்கம்:இந்தியா எங்கே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இந்தியா எங்கே?


இந்த நாட்டிலே பாதுகாப்போடு வாழ வேண்டு மானால், நம்முடைய மனைவி மக்கள், மானம் மரியாதை யோடு இருக்க வேண்டுமானால், இந்த நாட்டின் சுதந்திரத்தை நாம் காப்பாற்றித்தான் ஆகவேண்டும்.

நாம் வசிக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்கி றோம். பாதுகாப்புக்காகக் கதவை மூடி வைக்கிறோம். இதே போல், நாட்டில் மலிந்து கிடக்கும் எண்ணில்லாத கொடுமை களை, அழுகிப் போன கேடுகளை அகற்றிச் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். நம் நாட்டு எல்லையின் கதவுகளாகவும் அரண் களாகவும் இருந்து நம்மைக் காப்பாற்றும் நமது வீரப் படைகளை உற்சாகம் குன்றாமல் காப்பாற்ற வேண்டும்.

நம் நாட்டில் ஏர்முனையும் போர்முனையும் நன்றாக இருக்கிறது. அதனால் தான் பட்டினியின்றி நாம் உயிர் வாழ்கிறோம். இரண்டு படையெடுப்புகளைச் சமாளித்தோம். பாரத விடுதலையும் பறிபோகவில்லை. ஆனால், இந்த இரண்டு சக்திகளும் முனை மழுங்காமல் இருக்க வேண்டு மானால். பொது மக்களாகிய நம்முடைய அன்றாட கடமை களை நன்றாக செயல்புரிய வேண்டும். இன்று, இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு அரசியல், சமுதாய, மொழி, இன, சாதி, மத, கட்சிச் சண்டைகள், கள்ள வியாபாரம், பொய், சூது, வஞ்சகம், பொறாமை, லஞ்சம், போக்கிரித்தனம், போலித் தனம் இவைகளையெல்லாம் பார்க்கும் ஏர் வீரனான உழவன், 'இப்பேர்ப்பட்ட மக்களுக்காகவா நாம் இத்தனை பாடுபட்டு உணவு உற்பத்தி செய்கிறோம்?' என்று கேட்க ஆரம்பித்தால் நமது கதி என்னவாகும்?

இவற்றைப் பார்த்த இந்நாட்டுப் போர்வீரன். “இந்தக் கேடு கெட்ட மக்களுக்காகவா நாம் இமயத்தின் எல்லையில் நின்று இரவு பகல் கண்விழித்து உடல் விரைத்து இந்த நாட்டைப் பாதுகாக்கிறோம்?” என்று கவலையோடு நம்மைப் பார்க்கிறான்; பெருமூச்சு விடுகிறான்! துப்பாக்கி அவன் வீரக் கரங்களிலிருந்து, நழுவிக் கொண்டிருக்கிறது, அல்லது நம்மை பார்த்துக் குறி வைக்கத் துடிக்கிறது! என்ற நிலை வந்து விட்டால் என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/40&oldid=1401732" இலிருந்து மீள்விக்கப்பட்டது