பக்கம்:இந்தியா எங்கே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 53

பெரிய தலைவர்களின் பெயர்களைச் சொல்கிறீர்கள். காந்திஜி, நேதாஜி படங்களைக் காட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் செய்கைகளைக் கண்டால், அவர்கள் வழி வந்தவர்கள்தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தயவு செய்து முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். சுதந்திரம் வந்தது உங்களுக்காக மட்டுமல்ல; நீங்கள் ஐநூறு மந்திரிகளும், சில கட்சிகளும் கடத்தல் மன்னர்களும் கருப்பு மார்க்கெட்காரர்களும் சில லட்சம் அரசாங்க உத்தியோகஸ் தர்களும் மட்டும் வாழ்ந்தால் போதாது. •

அறுபது கோடி மக்கள் வாழ வேண்டும். அதற்கு நீங்கள் வழி காட்டிகளாக இருப்பீர்கள் என்று எதிர் பார்த்தோம் ஆனால். நீங்களெல்லாம் கைகாட்டி மரங்களாக செயலற்று நின்று விட்டீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறோம். மனமிரங்கி மாற மாட்டீர்களா? மக்கள் உணர்ச்சியை மதிக்க மாட்டீர்களா? நூற்றாண்டு காலமாக மணிமுடி தரித்து, சிங்காதனத்தில் அமர்ந்து அரண்மனைச் சுகபோகங்களை அனுபவித்து, அந்தப்புர உல்லாசிகள் மத்தியிலே அன்னச்சிறகு துரவப் பட்ட மஞ்சத்திலே. அழகுச் சிலைகளின் நடனத்திலே, அரம்பையர் தம் மயக்கத்திலே மயங்கி மூழ்கிக் கொண்டி ருந்த மன்னர்களே தங்களை மாற்றிக் கொள்ளும் நிலை நிர்ப்பந்தம் ஏற்பட்டதே! ஜனநாயகம் பேசும் நீங்கள் கொஞ்சம் செவி சாய்க்கவாவது கூடாதா? சற்று விலகி இருந்து நாட்டை வாழ்விக்க வேண்டாமா? சாகும் வரையில் மந்திரியாகத் தான் இருக்க வேண்டுமா? -

“நாங்கள் மாறிவிட்டால் இந்த நாட்டை ஆள்வது யார்? இந்த நாடு அனாதையாகப் போய்விடும் என்று எண்ணு கிறீர்களா? அப்படி எண்ணினால். நீங்கள் என்றுமே அழியாத சிரஞ்சீவிகள் என்பதற்கு உத்தரவாதம் தருவீர்களா என்று கேட்கிறான் சின்னத்தம்பி! வேண்டாம்! உங்கள் ஸ்வரத்தில் அபஸ்வரம் கேட்க வேண்டாம்! உங்கள் வாதத்தில் அபவாதம் தொனிக்க வேண்டாம்! செய்த குற்றங்களுக்குச் செய்யப் போகும் குற்றங்கள் சமாதானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/55&oldid=537615" இலிருந்து மீள்விக்கப்பட்டது