பக்கம்:இந்தியா எங்கே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

5


கொள்கை முன்னேற்றத்தைக் கொண்ட அரசியல் சக்தி விடுதலைக்கு வேலியாக வருவதை வரவேற்கிறோம். ஆனால், ஒரு கொள்கையும் இல்லாமல், எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன். இன்று பலநூறு கட்சிகள் அல்ல - ஆயிரமாயிரம் கோஷ்டிகள் கிளம்பி, அரசியல் பஜனை செய்து கொண்டிருக்கின்றன. இந்த பஜனையில், சில கோஷ்டிகானம் மக்களைக் கவர்கிறது. பலரது ஜால்ராக்கள் எடுபடாமல் போய் விடுகிறது - ஆளுக்கொரு கட்சி; நாளுக்கொரு கூச்சல், வேளைக்கொரு வேஷம் வீதிக்கொரு நாடகம்! எல்லாம் விளம்பரம் வேடிக்கை வினோதம் விளையாட்டு வாய்ப்பந்தல் இது மக்களுக்கும் பழக்கமாகி விட்டது. இருபத்தி நாலு மணி நேரமும் இத்தனை கோடி ஒட்டர்களும், திண்ணையில் சாய்ந்தபடி அரசியல்வாதிகளின் பேச்சுத் திறமைகளைப் பற்றியும், அவர்களது தந்திரங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு பொழுதைப் போக்குவது தான், ஜனநாயக உரிமை என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்! அவர்களைச் சரியாக ஆட்டிப் படைக்கும் அரசியல்காரர்கள் இந்த இரண்டு பேரையும் ஆட்டிப்படைக்கும் சர்வ சக்தி படைத்த பண வலிமை இந்த மூன்று பிற்போக்குகளையும் ஒழிக்கப் போவதாக. வெறும் வாயளவில் சொல்லிக் கொண்டிருக்கும் முற்போக்குவாதியின் பலவீனமான முனகல்

இந்த நாற்கோணத் திடலில் அவ்வப்போது நடைபெறும் தேர்தல் விளையாட்டு தேர்தலில் பணமூட்டையின் பவனிகள்! சூழ்ச்சி வலை வீச்சுக்கள்! வஞ்சக நஞ்சின் விருந்துகள்! கொடுமையின் குரோதமும் நிறைந்த கூச்சல் படைகள்! பயமுறுத்தும் பாசீஸப் போர்கள்! அச்சுறுத்தும் அடியாள் கூலிகள்! இவர்களுக்கு மத்தியில் இந்திய விடுதலையின் உயிர் மூச்சான ஒட்டுரிமை விலை கூறப்படுகிறது. விலை மதிப்பில்லாத, உயிர் கொடுத்துப் பெற்ற விடுதலைக்கு, இன்று தீயசக்திகள் விலை ே பாட முன்வந்து விட்டன. -

இந்த நிலையில் நமது பாரத ராஷ்டிரபதி மாட்சிமைமிக்க நீலம் சஞ்சீவி ரெட்டியின் குடியரசு தினப் பிரசங்கத்தின் இரண்டு கேள்விகள் நம்பிக்கை தருவதாயிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/7&oldid=982938" இலிருந்து மீள்விக்கப்பட்டது