பக்கம்:இந்தியா எங்கே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - நம் தாய்

பொன் : திருடன் ஒடி வந்தான். குத்தினான். நல்ல வேளை யாகக் கவசம் அணிந்திருந்தேன். காயப்பட வில்லை.

மலை : காயம் பட்டால்தானென்ன? உங்கள் மேனியே தங்கம். மங்கவா போகிறது? தங்கத்தை இரும்பு ஒன்றும் செய்யாது;

[ক-চT

இடம் : மலைச்சாரம் காலம் : ஓர் இரவின் முன்மாலை

(செங்கதிர் சாயும் வானப்பின்னணி. சுந்தரத்தோற்றவனம். செவ் வண்ணத்தின் சிறந்த ஆற்றல் சுற்றிவளையும் பிரதேசம். சிலு சிலுக்கும் ஓடை. சிரிக்கும் தாவரம். சுகம்பெருக்கும் சீதத்தென்றல். ஆங்கோர் கல்மேடை. அதன்மீது அமர்ந்துள்ளான் வாலிபன் வானழகன். வாழ்க்கைப்புயல் அவனை ஒரு தற்காலிகமான வனவாசியாக்கியுள்ளது. நாட்டின் குழப்பம் அவனை அம்மலைப் பிரதேசத்தில் ஒதுக்கி வைத்துள்ளது. அவன் அமர்ந்த அந்த, பாராங்கல்லைப் போன்றே, அவன் உறுதி படிந்த உள்ளமும், உணர்ச்சியும், அக்கலைஞன் எழுப்பும் குழல்நாதம் போன்றது. அவனது கட்டற்ற விடுதலை வேட்கை, எளிய உடை வேடன் சாயலில் இடுப்பில் வேட்டியை இறுக்கக் கட்டியுள்ளான். தலையில் மான் தோல் பாகையாகத் துலங்குகிறது - இடுப்பில் ஒரு கட்டாரி. கேட்பவர் மன இருளைக்கீறி அமைதிதரும் அவன் மொழிபோன்றே, மெருகும், கூர்மையும், பளபளக்கும் மின் வெட்டும் அரிவாள், திரண்ட தோளிலும், சிவந்த மார்பிலும் வீரத்தை விமரிசனம் செய்யும் வடுக்கள். பரண்ட தலைமுடியிலும் ஒரு அழகு. இலட்சிய உறுதி பாய்ந்த கண்ணொளி. உட் தேங்கிய பழிஉணர்ச்சி கலந்துவரும் மூச்சு. குழலில் தேவகாந்தாரி பண்ணிசைத்துத் தன் கலக்கத்தை மாற்றிச் சாந்தி தரும் சங்கீத மருந்தைக் காதலால் உண்பதோடு, காற்றிலைகளிலும் கலக்கவிட்டுத் தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறான். மேடைக் குள்ளிருந்து அல்லது ஒரு மரத்தின் மறைவிலிருந்து யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/90&oldid=537652" இலிருந்து மீள்விக்கப்பட்டது