பக்கம்:இந்தியா எங்கே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 93

வான்

வான்

முடியாத பணிகளை மூச்சு விடாமல் செய்யும் போது உயிர் விம்மி வெளியே தள்ளி விட்ட கருங்கல் விழிகள்! இவைகளைச் சுத்தப்படுத்தா மல் நீ அணிந்தால் அப்பாபம் நம்மீது நிழலிடும். விரைவில் தூய்மைப்படுத்தி, உனக்கு நானே சூட்டுகிறேன் கண்ணே. ஆம். இவைகளை ஆற்று நீரில் குளிப் பாட்டினால், மாசு தீராது. இதை இங்கு அனுப்பிய அந்த பனித்தீவின் பிரபு வம்சத் தின் பலகோடி இருதயங்களிலிருந்து நாளை பெருகப் போகும் இரத்த வெள்ளத்திலே குளிப்பாட்டினால்தான் இவைகள் குற்றமற்ற மணிகளாகும். எங்கு சென்று எடுத்து வந்தீர்கள்? எங்கா? பாதகனுடைய பொக்கிஷத்திலிருந்து. வேல்விழி உனக்கு இவைகள் எல்லா விதத்திலும் உயர்ந்ததொரு செல்வத்தைக் கொண்டுவரத்தான் போனேன். ஆனால், சந்தர்ப்பம் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது. இதைவிட உயர்ந்த செல்வமா அது என்ன? அதுவா! பயங்கரக் கரடியான பொன் மேனி ராயனின் வைரம் பாய்ந்த இருதயம் தான். கட்டாரி கூட ஏறாதபடி கவசம் தரித்திருந்ததால் பிழைத்துக் கொண்டான். ஆகட்டும் சமயம் நேரும். என்ன எமலோகமான பொன்மேனிராயனின் மாளிகைக்குள்ளா சென்று வந்தீர்கள்? கரடி வேட்டைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றது இதற்குத்தானா? - இத்தகைய மனிதக் கரடிகளை வேட்டை

யாடாமல், பாவம் காட்டில் வாழும் மிருகங்களை

நாம் ஏன் வேல்விழி வதை செய்ய வேண்டும்? சரிதான். இனி உங்களை தனியாகப் போக அனுமதிப்பதே பிசகு, ஆகட்டும். அம்மாவிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/95&oldid=537657" இலிருந்து மீள்விக்கப்பட்டது