பக்கம்:இன்னொரு உரிமை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180  சு. சமுத்திரம்


"எவ்வளவு கேக்கான்?"

" நாற்பது கழஞ்சியும்... நாலாயிரமும்."

"ஓமக்குக் கொஞ்சமாவது 'கூறு' இருக்கா? அந்தப் பரமசிவம் புறம்போக்கு நிலத்த சுத்தி வளைச்சுப்போட்டிருக்கான். பேப்பர்ல வர்றதுமாதிரி விசாரணைக் கமிஷன் வந்தால்... தமயந்திலா சந்தில நிக்கணும்? அதோடு அவன் குடிகாரன், குட்டிக்காரன்."

"என்னழா... ஒரேயடியாய் நீட்டுற? உன் பெரியய்யா மவன் நடராஜன் குடிகாரன் இல்லியா? சீட்டாட்டம் வேற! பொம்பிள ஷோக்கு வேற."

"எங்க நடராஜன சொன்னா ... ஓம்ம நாக்கு அழுகிடும். பீடிகூடப் பிடிக்கமாட்டான். அவன் நடந்துபோற தூசீல அறுந்து போற தூசுக்குக்கூட பரமசிவம் பெறமாட்டான்! நான் நீன்னு பொண்ணு வீட்டுக்காரங்க போட்டி போடறாங்க."

"அப்படி வா வழிக்கி... நடராஜனுக்குத் தமயந்திய கேக்குறாங்க. கொடுத்திட வேண்டியது தான். உனக்கு எவ்வளவு போட்டாங்களோ அவ்வளவு நாம போட்டுடணுமாம்."

"உமக்குக் கொஞ்சமாவது இருக்கா? நாற்பது கழஞ்சியும், ஐயாயிரமும் நம்மால கொடுக்கமுடியுமா? நம்ம பிள்ளிக கதி என்னாவுறது?"

"நமக்கு பம்பு செட்டோடு, மூணு கோட்டை புஞ்சை அது இதுன்னு ஒரு லட்சம் ரூபா சொத்து இருக்கு. தமயந்திக்குப் பதினெட்டாயிரம் ரூபாய் போட்டால் குடியா முழுகி விடும்?"

"செக்களவு திரவியம் இருந்தாலும் செதுக்கித் திங்க ஆகாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/189&oldid=1369406" இலிருந்து மீள்விக்கப்பட்டது