பக்கம்:இன்னொரு உரிமை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாசப் பிரிவினை

கிழவர் தன் கால்களை லேசாக, வேண்டுமென்றே ஆட்டி அவளைத் தாலாட்டுகிறார். அந்தத் தாலாட்டோடு கூடவே பாட்டு ஒலிக்கிறது. ராகம் இல்லாத பாட்டு.

"செல்லக் கோபத்தை பொறுமையாக்கிப் பழகணும்பா! இதுக்குல்லாம் நீதாம்பா காரணம்... நீதான் என்னைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டே! வீட்ல அரிசி இருக்கோ இல்லையோ, எங்கேயாவது இரவல் அரிசி வாங்கி எனக்கு வேளா வேளைக்கி, ஆக்கிப்போட்டு எனக்குப் பசியே இல்லாமல் பண்ணிட்டே! முகத்தைப் பார்த்தே பசியறிந் தவள் நீ! இப்போ பசியறிந்தும், முகத்தைப் பார்க்க ஆளில்லாத நிலையில் கோபம் வரத்தான் செய்யும். என்னப்பா செய்யச் சொல்றே... கருணை செய்யுற இயற்கை இந்த வயித்தையும், இன்னும் அதிகமாய் குறைத்து கருணை பண்ணியிருக்கணும். இல்லன்னா நீயாவது அப்போவே... பசியில விட்டு எனக்குப் பயிற்சி கொடுத்திருக்கணும். மகனும், மருமகளும் கொடுக்கிற ஒரு வருடப் பயிற்சி நீ கொடுத்த நாற்பத்தஞ்சு வருஷப் பயிற்சிய ஒண்ணும் பண்ண முடியல! இதை இப்போ கோபமாச் சொல்லல... குறையாத்தான் சொல்றேன்."

அந்த முதுமைகள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு சொல்வதுபோல் ஸ்பரிசங்களால் இயலாமை உணர்வுகளை எழுப்பிக்கொண்டே முடங்கிக் கிடந்தார்கள், சென்னையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/211&oldid=1369027" இலிருந்து மீள்விக்கப்பட்டது