பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலை தலைவி; ஆம், அவரைச் சந்திக்காமல் போகும் இராக் காலத்தில் ஒருவரும் அறியாமல் அவர் ஊருக்குப் போகலாம் என்றே நினைக் கிறேன், தோழி: பாதி ராத்திரியில் காட்டு வழியில் செல்ல வேண்டும். மலைப் பகுதிகளை யெல் லாம் கடந்து போகவேண்டுமே! அப்படிப் போவது விளையாட்டா ? ஆடவர்களே செல்ல முடியாத அருமைப்பாடு - உடையதல்லவா அந்த வழி? அதில் நீ நள்ளிரவில் போகலாம் என்கிறாயே! | தலைவி: இங்கே படும் துன்பத்தைக் காட்டிலும் அப்படிப் போவதனால் துன்பம் மிகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அன்றியும் துன்பத்தின் முடிவில் இன்பம் இருந்தால், முன் பட்ட துன்பமெல்லாம் மறந்து போய்விடும். 'தோழி: கங்குலில் காட்டு விலங்குகள் எங்கும் * திரிந்து கொண்டிருக்கும் என்ற செய்தி உனக்குத் தெரியுமா? தலைவி: நன்றாகத் தெரியுமே! கறையான்கள் அணு அணுவர்கக் கட்டிய புற்றில் அந்தக் கறையான்களே ஈசலாக மாறிப் பறக்கும். அந்த, ஈசலுள்ள புற்றிலே " பாம்பு வந்து குடி - யிருக்கும். புற்றிற்குள் கறையான் 94