உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியன் பட்டது? எதற்காக உதவி கோருகிறாய்? என்னி டம் கூறு! [சித்ரபாலு ப்ரகலாதனை உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் கவனிக்கிறான். உடனே மூர்ச்சித்து விழுவது போல் பாவனை காட்டுகிறான்.] ப்ரகலாதன்:- காங்கேயா! காவ்கேயா!! காங்கேயன்:- [ப்ரகலாதன் சமீபத்தில் ஓடிவந்து நின்று] இதென்ன அபாயம்! நேசா! கீ என்ன செய்தாய் அவனை? உற்றுக் கவனிக்கிறான்] 6 ப்ரகலாதன்:-- ஐயோ! கான் ஒன்றும் செய்யவில்லையே ! என்னை ஏற இறங்கப் பார்த்தான். அவ்வளவு தான்! தங்கப்பதுமை சாய்வதைப்போல் சாய்ந்தான்! காங்கேயன்:-நீ சற்று விலகி நில்! அவனைக் கவனித் தால் அவளோர் ஆரியப் பெண்போல் தோன்றுகி றான். நீயோ, இக்காட்டுத் தமிழ் மகன். அவளு டைய சம்மதம் தெரிந்துகொள்ளாமல் நீ அவளைத் தொட்டு உபசாரம் செய்யலாகாது. [காங்கேயன் தனது கைக்குட்டையால் அவன் முகத்தண்டை விசுறு கிறான். ப்ரகலாதன் விலகி கின்று கவனிக்கிறான்.] சித்ரபானு:- [மூர்ச்சை தெளிந்து எழுந்து உட்காருகி றாள். காங்கேயனைப் பார்த்து] சற்று நேரத்திற்கு முன் என்னை வழிமறித்து நின்ற அந்தப் புமான் எங்கே? காங்கேயன்:- அதோ நிற்கிறார்!