பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

இராக்கெட்டுகள்


அயனியாதல் (Ionization): இச் செயலால் ஏதாவது ஒரு பொருள் (எ - டு. பூமிக்கு மேலுள்ள காற்று மண் டலப் பகுதிகள்) மின்னூட்டம் ஏற்றப்பெற்று ஏராளமான ஆற்றல் உணடாக்கப்பெறுகின்றது.

இராக்கெட்டு (Rocket): சிறு வாணத்தின் தத்துவத்தைப் பயன்படுத்தித் தன்னுள்ளே நிகழும் வெடிப்புக்களின் எதிர்வினை அல்லது எதிர் - இயக்கத்தால் முன் செல்லும் எய்கருவி. அந்த வெடிப்பினால் உண்டாகும் வாயுக்கள் பின்புறமாகச் செல்லுவதால் (அவை பின்னுள்ள காற்றைத் தள்ளுவதால் அல்ல) இக்கருவி முன் நோக்கிச் செல்கின்றது.

இராக்கெட்டின் சுமை (Payload): இராக்கெட்டு சுமந்து செல்லும் வளிமண்டல நிகழ்ச்சிகளை அளக்கும் கருவித் தொகுதி, வானெலியின் அனுப்பும் கருவி, காமிராக்கள் முதலியவை அடங்கிய பகுதி இது. இவை இராக் கெட்டில் மூக்கில் அமைக்கப்பெறுகின்றன.

இராடார் (Radar): இது ‘Radio Detection and Ranging’ என்பதன் சுருக்கம். இப்பொறியமைப்பு வானொலிச் சிற்றலைகளைப் பயன்படுத்திப் பொருள்களின் இருப்பிடத்தை அறியும்.

ஈர்ப்பு ஆற்றல் (Gravity) : பூமி பொருள்களைத் தன்னுடைய மையத்தை கோக்கி இழுக்கும் விசை இது.

உந்து விசை (Thrust): ஒர் இராக்கெட்டு தன்னுள்ளே வளர்க்கும் “தள்ளுதலி”ன் அளவாகும் இது; இஃது இராத்தல்களில் அளக்கப்பெறுகின்றது.

எக்ஸ்புளோரர்-1 (Explorer-I): பூமியின் அருகிலுள்ள வளிமண்டலத்தையும், வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள