பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

இராக்கெட்டுகள்


டலத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. இது மிகப்பெரிதாக இருந்ததால் இரஷ்யர்கள் இதனை 'விண்வெளி விமானம்' (Space ship) என்றே வழங்கினர்.

ஸ்புட்னிக்-V (Sputnik-V) : இஃது இரஷ்யர்களால் 1960-ஆகஸ்ட் 19 இல் அனுப்பப்பெற்ற இரண்டாவது 'விண்வெளி விமானம்'. இதிலிருந்த இரண்டு நாய்கள், நாற்பது சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், நுண் கிருமிகள் இவையாவும் விண்வெளி மண்டலத்தினின்றும் உயிருடன் மீண்டன. இந்தக் 'கப்பல்' மறுநாள் திரும்பியது.